பொது செய்தி

இந்தியா

மரப்பாலம் வடிகாலை மேம்படுத்த அதிகாரிகளுக்கு கவர்னர் உத்தரவு

Added : டிச 02, 2019
Advertisement
 மரப்பாலம் வடிகாலை மேம்படுத்த அதிகாரிகளுக்கு கவர்னர் உத்தரவு

புதுச்சேரி:பொதுப்பணித்துறைக்கு சவாலாக உள்ள மரப்பாலம் வடிகாலை மேம்படுத்த திட்டம் தயாரித்து, ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என, கவர்னர் கிரண்பேடி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

புதுச்சேரியில் பெய்த கனமழையால் தண்ணீர் சூழ்ந்த ரெயின்போ நகர், கிருஷ்ணா நகர், நடேசன் நகர், இந்திரா சதுக்கம் உள்ளிட்ட பகுதிகளை நேற்று ஆய்வு செய்த கவர்னர் கிரண்பேடி, தண்ணீரை வௌியேற்ற அதிகாரிகளுக்க உத்தவிட்டார்.பின்னர், மரப்பாலம் பகுதியில் சாலையில் தண்ணீர் தேங்கி போக்குவரத்து பாதிப்பது குறித்து விசாரித்தார். அப்பகுதியில் உள்ள தேங்காய்த்திட்டு வடிகால் போதுமான அளவில் தண்ணீர் வடியாதது தெரியவந்தது. வடிகாலை பார்வையிட்ட கவர்னர், பொதுப்பணித்துறைக்கு சவாலாக உள்ள தேங்காய்திட்டு வாய்க்காலுக்கு தீர்வு காண, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் இணைத்து, வடிகாலை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

மேலும், பொதுப்பணித்துறை செயலர் சுர்பிர் சிங், பொதுப்பணித்துறை செயலர் அசோக்குமார், ஸ்மார்ட் சிட்டி தலைமை அதிகாரி அர்ஜூன் சர்மா ஆகியோர் தங்களின் கட்டுப்பாட்டில் துறை அதிகாரிகளை ஒருங்கிணைத்து, வடிகாலை மேம்படுத்துவது தொடர்பாக திட்டம் வகுத்து செயல்பட அறிவுறுத்தினார். பின்னர், வீராம்பட்டினம் கடற்கரை சுற்றுலா மையத்திற்கு சென்ற அவர், வனத்துறை உதவியுடன் மரக்கன்றுகள் நட உத்தரவிட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X