கப்பலூர் டோல்கேட்டில் நெரிசல்: அவதியில் வாகன ஓட்டிகள்| Dinamalar

கப்பலூர் டோல்கேட்டில் நெரிசல்: அவதியில் வாகன ஓட்டிகள்

Added : டிச 02, 2019

திருமங்கலம்:திருமங்கலம் கப்பலுார் டோல்கேட்டில் நேற்று கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு நான்கு கி.மீ., துாரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாயினர்.

டோல்கேட்களில் டிஜிட்டல் பணபரிவர்த்தனைக்காக 'பாஸ்ட் டேக்' முறை அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதற்கான காலக்கெடு டிச., 15 வரை நீடிக்கப்பட்டுள்ளது. கப்பலுார் டோல்கேட்டிலுள்ள 10 கவுண்டர்களில் எட்டு 'பாஸ்ட் டேக்' சேவைக்காக ஒதுக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள இரு கவுண்டர்களில் பணம் செலுத்தி செல்லலாம். தற்போது 30 சதவீத வாகனங்கள் மட்டுமே 'பாஸ்ட் டேக்' சேவை வழியாக செல்கின்றன.

மற்ற வாகனங்கள் பணம் செலுத்தி செல்வதால் நீண்ட வரிசையில் காத்திருந்து செல்ல வேண்டி உள்ளது.நேற்று கப்பலுார் டோல்கேட்டில் திருமங்கலம் பகுதியில் இருந்து சென்ற வாகனங்கள் 4 கி.மீ., துாரத்திற்கு காத்திருந்தன. இதனால் நெரிசல் ஏற்பட்டது. 'பாஸ்ட் டேக்' வசதியுள்ள வாகனங்களும் இதில் சிக்கின.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X