சம்பவம் செய்தி

தமிழ்நாடு

போலீஸ் செய்திகள்

Added : டிச 02, 2019
Advertisement

இரிடியம் மோசடி3 பேர் கைது

பேரையூர்: விருதுநகர் செவலுார் நந்தகுமார் 39. இவரது நண்பர்கள் டி.கல்லுப்பட்டி சண்முகபாண்டியன் 23, தாதன் குளம் அசோக்குமார் 18, தேனி வருஷநாடு ஜோதிபாசு. சண்முகபாண்டியன் உள்ளிட்ட மூவர், 'தங்களிடம் இரிடியம் உள்ளது. அதை குறைந்த விலைக்கு தருவதாக,' நந்தகுமாரிடம் கூறினர். நந்தகுமாரும் ரூ.5 ஆயிரம் கொடுத்தார். பணத்தை பெற்ற மூவரும் மேலும் ரூ. 50 ஆயிரம் கேட்டு மிரட்டினர். நந்தகுமார் டி.கல்லுப்பட்டி போலீசில் புகார் செய்தார். மூவரையும் போலீசார் கைது செய்தனர்.

ஆட்டோ டிரைவருக்கு கத்திக்குத்து

மதுரை: ஊமச்சிகுளம் கவியரசு 25, எம்.ஜி.ஆர்., பஸ் ஸ்டாண்ட்டில் ஆட்டோ டிரைவராக உள்ளார். இவருக்கும் மற்றொரு ஆட்டோ டிரைவர் இருதயராஜூக்கும் பயணிகளை ஏற்றுவதில் தகராறு ஏற்பட்டது. ஆனையூர் ரோட்டில் ஆட்டோவில் சென்ற கவியரசுவை இருதயராஜ், அவரது ஆதரவாளர்கள் வழிமறித்து கத்தியால் குத்தினர். கூடல்புதுார்போலீசார் விசாரிக்கின்றனர்.

வேனிலிருந்து விழுந்த மெக்கானிக் பலி

கள்ளிக்குடி: குராயூர் குமார் 45, அருப்புக்கோட்டை அரசு போக்குவரத்து கழக பஸ் டெப்டோவில் மெக்கானிக்காக வேலை செய்தார். கள்ளிக்குடியில் இருந்து குராயூருக்கு தனியார் வேனில் ஓடைப்பட்டி செல்லும் போது தடுமாறி கீழே விழுந்தார். காயமுற்ற அவர் மதுரை அரசு மருத்துவமனையில் இறந்தார். கள்ளிக்குடி போலீசார் விசாரிக்கின்றனர்.

பெண் கொலை: மூவர் கைது

கள்ளிக்குடி: சின்ன உலகாணி பெரியகருப்பன் மனைவி முத்துமாரி 28. இவர் சில நாட்களுக்கு முன் கண்மாய்கரையில் தலை நசுங்கிய நிலையில் கொலை செய்யப்பட்டார். இவ்வழக்கில் 30 பேரிடம் போலீசார் விசாரித்தனர். இதில் ஈடுபட்டதாக கூடக்கோவில் ராஜா மகன் ஆதீஸ்வரன் 23, முத்துராமலிங்கம் மகன் ராம்குமார் 18, கொலைக்கு உடந்தையாக இருந்த சின்னஉலகாணி கிருஷ்ணன் மனைவி முனியம்மாள் 27, ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

மது விற்பனை: 2 பேர் சிக்கினர்

பேரையூர்: வன்னிவேலம்பட்டி அருகே போலீசார் ரோந்து சென்ற போது அப்பகுதியை சேர்ந்த தினேஷ் 24, ஆமாத்துார் அழகர்சாமி 24, ஆகியோர் அனுமதியின்றி மது விற்றனர். மதுபாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் அவர்களையும் கைது செய்தனர்.

நீரில் மூழ்கி மாணவர் பலி

சோழவந்தான்: திருமங்கலம் காளிராஜ் மகன் யோகநாதன் 15, தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்தார். இவர் நவ 28.ல் பள்ளி சென்றவர் வீடு திரும்பவில்லை. மேலக்கால் வைகை ஆற்றில் சடலமாக மீட்கப்பட்டார். காடுபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

தண்ணீர் லாரிகள் மோதல் ஒருவர் பலி

அவனியாபுரம்: பை பாஸ் ரோட்டில் நேற்று முன் தினம் இரவு மாநகராட்சி ஒப்பந்த தண்ணீர் லாரியும், தனியார் தண்ணீர் லாரியும் நேருக்குநேர் மோதின. தனியார் தண்ணீர் லாரி டிரைவர் சிலைமான் சுப்பிரமணி 52, பலியானார். மாநகராட்சி ஒப்பந்த தண்ணீர் லாரிடிரைவர் சரவணன் 53, மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X