58 கிராம கால்வாயில் தண்ணீர் கேட்டு டிச.4 முதல் தொடர் உண்ணாவிரதம்

Added : டிச 02, 2019
Advertisement

உசிலம்பட்டி:58 கிராம கால்வாயில் தண்ணீர் திறக்க வலியுறுத்தி டிச. 4 முதல் தொடர் உண்ணாவிரதப்போராட்டம் நடத்த பாசன விவசாயிகள் முடிவு செய்துள்ளனர்.

உசிலம்பட்டி பகுதியில் 58 கிராமங்களில் உள்ள 33 கண்மாய்களுக்கு வைகை அணை தண்ணீரை கொண்டு வந்து பாசன வசதி பெற 58 கிராம கால்வாய் திட்டம் உருவானது. வைகை அணையின் நீர்மட்டம் 67 அடியாக உயர்ந்தால் மட்டுமே கால்வாயில் தண்ணீர் திறக்க முடியும். மழை பெய்தும் இதுவரை இந்த கால்வாய் பாசனத்தின் கீழ் வரும் 33 கண்மாய்களும் தண்ணீரின்றி உள்ளது. எனவே, தற்போது கால்வாயில் தண்ணீர் திறக்க கோரி பாசன விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

நேற்று உசிலம்பட்டியில் நடந்த 58 கிராம பாசன விவசாயிகள் சங்க ஆலோசனைக் கூட்டத்தில் கால்வாயில் தண்ணீர் திறக்ககோரி டிச.4 முதல் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. கூட்டத்தில் தலைவர் ஜெயராஜ், செயலாளர் பெருமாள், பொருளாளர்உதயக்குமார் மற்றும்நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X