பொது செய்தி

தமிழ்நாடு

தனிப்பயிராக ஆமணக்கு சாகுபடி: உடுமலை பகுதியில் விவசாயிகள் துவக்கம்

Added : டிச 02, 2019
Advertisement

உடுமலை:வரப்புகளில் வேலிப்பயிராக பராமரிக்கும் ஆமணக்கு செடிகளை தனிச்சாகுபடியாக உடுமலை பகுதி விவசாயிகள் பயிரிட துவங்கியுள்ளனர்.எண்ணெய் வித்து பயிராக ஆமணக்கு இருந்தாலும், முக்கிய சாகுபடியில், பூச்சி, நோய்த்தாக்குதலை கட்டுப்படுத்த, வரப்பு பயிராகவே உடுமலை பகுதி விவசாயிகள் பராமரித்து வந்தனர்.வரப்புகளில் ஆமணக்கு செடிகளை வளர்ப்பதால், தக்காளி உட்பட காய்கறி பயிர்களை தாக்க வரும், பூச்சிகள், ஆமணக்கு இலைகளால் ஈர்க்கப்படும்; அந்த இலைகளை பூச்சிகள் தாக்கி சேதப்படுத்துவதால், பிரதான பயிர் பாதுகாக்கப்படும். விவசாயிகள் கூறியதாவது: ஆமணக்கு சாகுபடிக்கு, குறுகிய கால வீரிய ஓட்டு ரக விதைகளை பயன்படுத்தியுள்ளோம். இந்த ரகத்தில், குறுகிய கால இடைவெளியில் செடிகளில், அதிக குலைகள் பிடிக்கும். வடகிழக்கு பருவமழை பெய்து வருவதால், விளைநிலங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால், ஆமணக்கு செடிகள் பாதிக்கும் நிலை காணப்படுகிறது. மேலும், இலைப்புழுக்கள், சாறு உறிஞ்சம் பூச்சிகள் மற்றும் காய்ப்புழுக்கள் செடிகளை தாக்குகிறது. ஏக்கருக்கு, 1,500 கிலோ விளைச்சல் கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம்.இவ்வாறு, தெரிவித்தனர். ஆமணக்கு சாகுபடியில், ஊடுபயிர்களையும் நடவு செய்து, கூடுதல் வருவாய் பெறலாம் என கோவை வேளாண் பல்கலை., அறிவுறுத்துகிறது. அதன்படி, ஒவ்வொரு 6 வரிசை நிலக்கடலைக்கும் இடையே ஒவ்வொரு வரிசை ஆமணக்கு பயிரிடலாம்.பருவமழை தாமதமாக கிடைக்கும் பகுதியில், உளுந்து பயிருடன், ஆமணக்கை 6:1 என்ற விகிதத்தில் பயிரிடலாம். இறவை சாகுபடியில், ஆமணக்கை வெங்காயத்தோடு தேவையான இடைவெளியில் பயிரிடலாம்.பயிரின் வயதினைக் கணக்கில் கொண்டு அறுவடை மேற்கொள்ளவேண்டும். முற்றிய விதைக் காத்தை இதர கொத்துக்களைப் பாதிக்காதவாறு அறுவடை செய்யவும். விதைகளை நிழலில் குவித்து வைக்காமல் சூரிய ஒளியில் உலர்த்தவும். காய்ந்த கொத்தை குச்சி கொண்டு, அடித்து விதை முத்துக்களை பிரித்தெடுத்து, காற்றில் இட்டு தூசியை நீக்கவும் அல்லது விதைப் பிரித்தெடுக்கும் கருவி கொண்டு விதைகளைப் பிரித்தெடுக்கவும்.இவ்வாறு, வேளாண் பல்கலை., விவசாயிகளுக்கு இணையதளம் மூலம் பரிந்துரைத்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X