பொது செய்தி

தமிழ்நாடு

மலைவாழ் கிராமங்களில் சிறுதானிய சாகுபடி:வேளாண்துறை நடவடிக்கைக்கு காத்திருப்பு

Added : டிச 02, 2019
Advertisement

உடுமலை:வேளாண்துறை சார்பில், மலைவாழ் கிராமங்களுக்கான சிறு தானிய சாகுபடி சிறப்பு திட்டத்தை மீண்டும் செயல்படுத்தினால், அவர்களது வாழ்வாதாரம் மேம்படும்.ஆனைமலை புலிகள் காப்பகம், உடுமலை, அமராவதி வனச்சரகத்தில், இரு மலைத்தொடர்களுக்கு இடையிலுள்ள சமவெளிப்பகுதியில், அங்கு வசிக்கும் மக்கள், தங்கள் உணவிற்காக பல்வேறு சாகுபடிகளை மேற்கொள்கின்றனர்.குறிப்பாக, நெல், சிறு தானியங்கள் மற்றும் மொச்சை ஆகிய சாகுபடி மலைவாழ் மக்களால், பரவலாக மேற்கொள்ளப்படுகிறது. விளைபொருட்களை பிற பகுதிகளுக்கு கொண்டு வந்தும் விற்பனை செய்து வந்தனர்.தொழில்நுட்ப விழிப்புணர்வு இல்லாதது மற்றும் விதை உட்பட இடுபொருட்கள் கிடைக்காததால், சிறு தானிய சாகுபடியை பெரும்பாலான மலைவாழ் மக்கள் கைவிட்டனர்.குறிப்பாக, குழிப்பட்டி, மாவடப்பு, கோடந்துார் போன்ற மலைவாழ் குடியிருப்புகளில், சாமை, ராகி போன்ற சிறு தானிய சாகுபடிகள் முற்றிலுமாக காணாமல் போனது.இது குறித்து, மலைவாழ் மக்கள், விவசாயிகள் குறை தீர் கூட்டத்தில், அளித்த மனுக்கள் அடிப்படையில் வேளாண்துறை நடவடிக்கை எடுத்தது.சில ஆண்டுகளுக்கு முன், சிறப்பு திட்டத்தின் கீழ், குழிப்பட்டி, மாவடப்பு, பூச்சிகொட்டான்பாறை, ஆட்டுமலை, கோடந்துார் ஆகிய மலைவாழ் குடியிருப்புகள் தேர்வு செய்யப்பட்டன.அங்குள்ள மக்களுக்கு, ராகி, சாமை ஆகிய விதைகள் மானியத்தில், வேளாண்துறையால் வழங்கப்பட்டன. பின்னர், நுண்ணுாட்ட சத்து உட்பட இடுபொருட்களும், தேவையான தொழில்நுட்ப ஆலோசனைகளையும் வேளாண்துறையினர் வழங்கினர். இத்திட்டம் ஓராண்டு மட்டும் செயல்படுத்தப்பட்டு, கைவிடப்பட்டது. வடகிழக்கு பருவமழைக்கு பிறகு, தங்கள் குடியிருப்பை ஒட்டிய விளைநிலங்களில், பல்வேறு சாகுபடி மேற்கொள்ள மலைவாழ் மக்கள் ஆர்வமாக உள்ளனர். அங்குள்ள சிற்றாறுகளிலும், நிலையான நீர்வரத்து உள்ளது. எனவே, வேளாண்துறையினர் இந்த சீசனில், சிறு தானிய சாகுபடிக்கு தேவையான விதைகள் மற்றும் இடுபொருட்களை மானியத்தில் வழங்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X