குன்னுார்:நீலகிரி மாவட்ட எஸ்.பி., உத்தரவின் பேரில், குன்னுார் போக்குவரத்து போலீசார் சார்பில், வாகனங்களின் முகப்பு விளக்குகளுக்கு கருப்பு 'ஸ்டிக்கர்' ஒட்டப்பட்டது.இன்ஸ்பெக்டர் முரளி தலைமையில், காவலர் சுந்தரபெள்ளி உட்பட போக்குவரத்து போலீசார், பஸ் ஸ்டாண்ட் அருகே, மினி பஸ்கள், கார்கள், பைக் உள்ளிட்ட வாகனங்களுக்கு கருப்பு 'ஸ்டிக்கர்' ஒட்டப்பட்டது. தொடர்ந்து, வாகனங்களில் முகப்பு விளக்குகளில், கருப்பு 'ஸ்டிக்கர்' ஒட்டாமல் வருவதால் எதிரே வரும் வாகனங்களின் டிரைவர்கள் நிலை தடுமாறுகின்றனர். மேலும், ஆடம்பரத்திற்காக விதிமுறைகளை மீறி, விபத்துகளை ஏற்படுத்தும், அதிக வெளிச்சம் தரும் முகப்பு விளக்குகளை பயன்படுத்துவதை தவிர்க்க வலியுறுத்தப்பட்டது. எதிரே வாகனங்கள் வரும்போது முகப்பு விளக்கின் வெளிச்சத்தை குறைக்க வேண்டும் என்ற விதிமுறையை டிரைவர்கள் பின்பற்ற அறிவுறுத்தப்பட்டது.