பொது செய்தி

தமிழ்நாடு

கிராமங்களில் அடிப்படை தேவை குறித்து ஆய்வு

Added : டிச 02, 2019
Advertisement

பந்தலுார்:உள்ளாட்சி தேர்தலையொட்டி, உளவு துறை போலீசார் மூலம், கிராமங்களில் அடிப்படை தேவைகள் குறித்து, ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.தேர்தல் நேரங்களில், மக்கள் தங்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, தேர்தல் புறக்கணிப்பு, வேட்பாளர்களை முற்றுகையிடுதல் உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுகின்றனர். உள்ளாட்சி தேர்தலில், கிராமத்தில் சமூக பணியாற்றும் அல்லது கிராமத்திற்கு முக்கிய நபர்களை வெற்றிபெற செய்வது தொடர்கிறது. இந்நிலையில் உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கான அனைத்து பணிகளையும் அரசு மேற்கொண்டுள்ளது.தேர்தலில் பணியாற்ற பணியாளர்களின் விபரங்கள் பதிவு செய்யப்பட்டு, கடிதங்கள் பெறப்பட்டுள்ளன. வாக்குச்சாவடி மையங்களும் ஆய்வு செய்யப்பட்டு, தேர்தல் அதிகாரிகள் மூலம் கூட்டங்கள் நடத்தி, அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது.இந்நிலையில், தேர்தல் நேரத்தில் பிரச்னை வருவதை தடுக்கவும், ஆளும் கட்சி வேட்பாளர்களின் வெற்றிக்கு, ஏற்ற வகையில் உளவுத்துறை போலீசார் மூலம், கிராமங்களில் அடிப்படை பிரச்னைகள், தேவைகள் குறித்து விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது. இதில் குடிநீர், சாலை, நடைபாதை, தெருவிளக்கு, குடியிருப்பு வசதிகள், பிற கோரிக்கைகள் குறித்து, ஆய்வு செய்து விபரங்கள் அரசுக்கு அனுப்பப்படுகிறது. தொடர்ந்து தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்னதாக, நிதி ஒதுக்கீடு செய்து, வளர்ச்சி பணிகளை அசுர வேகத்தில் மேற்கொள்ள உள்ளாட்சி அமைப்புகள் களத்தில் இறங்கியுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X