மாநில அளவிலான விளையாட்டு போட்டி மதுரை மருத்துவக் கல்லூரி சாம்பியன்

Added : டிச 02, 2019
Share
Advertisement
மதுரை:மதுரையில் நடந்த மருத்துவக் கல்லுாரிகளுக்கு இடையேயான மாநில விளையாட்டுப் போட்டியில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை மதுரை அரசு மருத்துவக் கல்லுாரி பெற்றது. கோவை பி.எஸ்.ஜி., கல்லுாரிக்கு 2வது இடம் கிடைத்தது.நேற்று நடந்த பரிசளிப்பு விழாவிற்கு டீன் சங்குமணி தலைமை வகித்தார். முன்னாள் டீன் மருதுபாண்டியன்,கல்லுாரி துணை முதல்வர் தனலட்சுமி முன்னிலை வகித்தனர்.தென்மண்டல

மதுரை:மதுரையில் நடந்த மருத்துவக் கல்லுாரிகளுக்கு இடையேயான மாநில விளையாட்டுப் போட்டியில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை மதுரை அரசு மருத்துவக் கல்லுாரி பெற்றது. கோவை பி.எஸ்.ஜி., கல்லுாரிக்கு 2வது இடம் கிடைத்தது.

நேற்று நடந்த பரிசளிப்பு விழாவிற்கு டீன் சங்குமணி தலைமை வகித்தார். முன்னாள் டீன்
மருதுபாண்டியன்,கல்லுாரி துணை முதல்வர் தனலட்சுமி முன்னிலை வகித்தனர்.தென்மண்டல போலீஸ் ஐ.ஜி., சண்முகராஜேஸ்வரன் பரிசுகளை வழங்கி பேசுகையில்,
'விளையாட்டு கற்றுத்தரும் வாழ்க்கை பாடம் அதிகம். வாழ்வில்தோல்விகளை சந்திக்க பயபடக்கூடாது. அதில் இருந்து மீண்டுவரபோராடுவது முக்கியம்.

இப்போராட்டத்தை விளையாட்டில் கற்கலாம். வாழ்க்கையில் தோல்வி வந்துவிடுமோ எனபயப்படாமல்,விளையாட்டைப் போன்று இறுதி வரை போராட வேண்டும். ஒரு நாள் வெற்றி நிச்சயமாகும்,என்றார்.விழாவில் டாக்டர் பிரஜனா வெங்கடேஷ், விளையாட்டுஆலோசகர்கள் முத்துக்குமார், ஜானகிராமன், கல்லுாரி தடகள சங்க துணைத் தலைவர் அழகுவடிவேல்
பங்கேற்றனர்.ஏற்பாடுகளை 'பிளாட்டின் ஹாக்ஸ்' மாணவர்கள் செய்திருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X