செம்மண்வயல் சாலை மோசம்: மக்கள் சென்றுவர சிரமம்

Added : டிச 02, 2019
Share
Advertisement

பந்தலுார்:பந்தலுார் அருகே செம்மண்வயல், கிராமத்திற்கு செல்லும் சாலையை சீரமைக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.பந்தலுார் அருகே நெல்லியாளம் நகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள செம்மண்வயல் கிராமத்தில், பழங்குடியினர் உட்பட அனைத்து தரப்பு மக்களும் குடியிருந்து வருகின்றனர். கிராமத்திற்கு செல்லும் சிமென்ட் சாலை அமைத்து, பல ஆண்டுகள் கடந்த நிலையில், முற்றிலுமாக பெயர்ந்து காணப்படுகிறது.இதனால் சிறிய வாகனங்கள் செல்வதிலும், பாதசாரிகள் நடந்து செல்வதிலும் சிரமம் ஏற்பட்டுள்ளது. இரவில் சிறுத்தை நடமாட்டம் உள்ளதால், மக்கள் நடந்து செல்ல அச்சப்படுவதால், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களும், சாலையை காரணம் காட்டி வர மறுக்கின்றனர். எனவே, பழுதடைந்த சாலையை சீரமைத்து தர வேண்டும் என கிராமத்து மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X