ஊட்டி:நீலகிரி மின் பகிர்மான வட்ட மேற்பார்வை செயற் பொறியாளர் வாசுநாயர் பிரேம்குமார் அறிக்கை; நீலகிரியில் கேங்மேன் பயிற்சி பதவிக்கு, 544 நபர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் உடற் தகுதி தேர்வு, சாண்டிநல்லா துணை மின் நிலையத்தில் 2ம் தேதி (இன்று) முதல், 14ம் தேதி வரை காலை, 8:00 முதல் மாலை, 4:00 மணி வரை நடக்கிறது. விண்ணப்பித்து மின்னஞ்சல் மூலம் பெறப்பட்ட அனுமதி சீட்டு மற்றும் அனைத்து ஆவணங்களுடன், இந்த நாட்களில் தவறாமல் பங்கேற்க வேண்டும்.
Advertisement