பொது செய்தி

தமிழ்நாடு

திண்டிவனம் கூட்டுறவு நகர வங்கி நிர்வாக குழு கூட்டம்

Added : டிச 02, 2019
Advertisement

திண்டிவனம்:திண்டிவனம் கூட்டுறவு நகர வங்கி நிர்வாகக்குழு கூட்டம் வங்கி அலுவலகத்தில் நடந்தது.கூட்டுறவு நகர வங்கி வங்கி தலைவர் சேகர் தலைமை தாங்கினார்.

கூட்டத்தில், 66வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவில், விழுப்புரம் மாவட்டத்தில் சிறந்த கூட்டுறவு வங்கியாக திண்டிவனம் கூட்டுறவு வங்கியை தேர்ந்தெடுத்து கேடயம் வழங்கிய அமைச்சர் சண்முகத்திற்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.தொடர்ந்து, ஆகஸ்ட் 2019 முதல் அக்டோபர் 2019ம் வரை செலவினங்கள், நகைக்கடன் மற்றும் வைப்புக்களை அங்கீகரித்தல், வங்கியில் அடமானக்கடன் 1 கோடியே 12 லட்சத்து 85 ஆயிரம் ரூபாய், சிறுவணிகக்கடன் 4 லட்சம் ரூபாய் மற்றும் சிறுவணிக குழுக்கடன் 2 லட்சத்து 30 ஆயிரம் கடன் தொகையை அங்கீகரித்தல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.கூட்டத்தில், வங்கி இயக்குநர்கள் துரை, சேட்டு, திருமகள், நரேந்திரகுமார், அண்ணாதுரை, கற்பகம், பிரகாஷ், வரலட்சுமி, பொது மேலாளர் விஜயக்குமார், மேலாளர் செல்வம் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X