உள்ளாட்சி தேர்தல் விருப்பமனு தி.மு.க.,வினரிடம் நேர்காணல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

உள்ளாட்சி தேர்தல் விருப்பமனு தி.மு.க.,வினரிடம் நேர்காணல்

Added : டிச 02, 2019
 உள்ளாட்சி தேர்தல் விருப்பமனு தி.மு.க.,வினரிடம் நேர்காணல்

திண்டிவனம்:திண்டிவனத்தில் உள்ளாட்சி தேர்தலி்ல் போட்டியிடும் தி.மு.க.வினரிடம் நேர்காணல் நிகழ்ச்சி நடந்தது.
திண்டிவனம் தொகுதியில், நகராட்சி மற்றும் ஒன்றியங்களில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் தி.மு.க,வினிரிடம் நேர்காணல் நிகழ்ச்சி, திண்டிவனத்திலுள்ள எல்.கே.டவரில் இரண்டு நாட்களாக நடந்து வருகின்றது.விழுப்புரம் மாவட்ட வடக்கு தி.மு.க.,செயலாளர் செஞ்சி மஸ்தான் எம்.எல்.ஏ.,தலைமையில் நேர்காணல் நடந்து வருகின்றது. இதில், திண்டிவனம் தொகுதி எம்.எல்.ஏ.,சீத்தாபதிசொக்கலிங்கம், முன்னாள் எம்.எல்.ஏ, சேதுநாதன் மாவட்ட வழக்கறிஞர் அணி தலைவர் ஆதித்தன், நகர செயலாளர் கபிலன்,பொதுக்குழு உறுப்பினர் ரமணன் ஆகியோர் பங்கேற்றனர்.நகர்மன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிடுவதற்கு விண்ணப்பித்திருந்த மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் ரமேஷ், இலக்கிய அணி அமைப்பாளர் சின்னச்சாமி, முன்னாள் மாவட்ட துணை செயலாளர் அசோகன் உள்ளிட்டவர்களிடம் நேர்காணல் நடத்தப்பட்டது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X