சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பெண் மீது தாக்குதல் 4 பேர் மீது வழக்கு

Added : டிச 02, 2019
Advertisement

சங்கராபுரம்:சங்கராபுரம் அருகே இளம் பெண்ணை திட்டி தாக்கிய 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.சங்கராபுரம் வட்டம் பரமநத்தம் கிராமத்தை சேர்ந்த கருணாநிதி மனைவி விஜயலட்சுமி, 38; இவரது வீட்டுக்கு முன்பு அதே ஊரை சேர்ந்த ஜொல்லு மகன் வெங்கடேசன், வெங்கடேசன் மனைவி அஞ்சலை, சாமியார் மகன் ஜெயராமன், ஞான பிரகாஷ் மகன் ராமகிருஷ்ணன் ஆகியோர் கோவில் கட்ட முயன்றதாக கூறப்படுகிறது.வீட்டு முன் ஏன் கோவில் கட்டுகிறீர்கள் என்று விஜயலட்சுமி கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த வெங்கடேசன் உள்ளிட்ட நான்கு பேரும், விஜயலட்சுமியை திட்டி தாக்கினர்.இது குறித்து விஜயலட்சுமி புகாரின் பேரில் சங்கராபுரம் சப் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், தாக்குதல் நடத்திய 4 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X