சம்பவம் செய்தி

தமிழ்நாடு

இரும்பை மாகாளேஸ்வரர் கோவில் குளத்தில் ஆழமான பகுதிகளில் குளிப்பதை தடுக்க வேண்டும்

Added : டிச 02, 2019
Advertisement
 இரும்பை மாகாளேஸ்வரர் கோவில் குளத்தில் ஆழமான பகுதிகளில் குளிப்பதை தடுக்க வேண்டும்

திண்டிவனம்:இரும்பை மாகாளேஸ்வரர் கோவில் வளாகத்தில் உள்ள குளத்தில் ஆழமான பகுதியில் குளிப்பதற்கு தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
புதுச்சேரி-திண்டிவனம் சாலையில் மொரட்டாண்டி டோல்கேட்டில் இருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் பிரசித்தி பெற்ற இரும்பை மாகாளேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது.கோவிலுக்கு தினந்தோறும் புதுச்சேரி, தமிழகப்பகுதி மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பக்தர்கள் வந்து செல்கின்றனர்.கோவிலுக்கு எதிரிலேயே 30 அடிக்கு மேல் ஆழமுள்ள குளம் அமைந்துள்ளது.கோவிலுக்கு வரும் பக்தர்கள் முதலில் குளத்திற்கு சென்று வருவது வழக்கம்.தற்போது பெய்த கனமழையில் கோவில் குளத்தில் நீர் நிரம்பியுள்ளது. கார்த்திகை மாதம் என்பதால், தினந்தோறும் ஏராளமான அய்யப்ப பக்தர்கள், குளத்தில் இறங்கி காலை மற்றும் மாலை நேரங்களில் நீராடி வருகின்றனர்.குளத்தில், பெரியவர்கள் மட்டுமின்றி, சிறுவர்களும் குளிக்கின்றனர். கோவில் நிர்வாகம், இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ், திருவக்கரை வக்கரகாளியம்மன் கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.இந்த நிர்வாகத்தின் சார்பில், இந்த குளம் ஆழமானது என்றும், தண்ணீர் நிரம்பியுள்ளதால், பக்தர்கள் இறங்கி நீராடுதல் ஆபத்தானது என்று எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டுள்ளது.இதை மீறியும், ஏராளமானோர் குளத்தில் இறங்கி, குளித்து வருகின்றனர். எனவே, கோவில் நிர்வாகம் ஒரு நபரை நியமித்து, கோவில் குளத்தில் ஆழமான இடத்தில் இறங்கி குளிப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X