கள்ளக்குறிச்சி:கள்ளக்குறிச்சி தே.மு.தி.க., சார்பில் உள்ளாட்சி தேர்தலில் விருப்ப மனு அளித்தவர்களிடம் நேர்காணல் நேற்று நடந்தது.கள்ளக்குறிச்சி மாவட்ட தே.மு.தி.க., சார்பில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களில் தகுதி வாய்ந்த நபர்கள் தேர்வு செய்யும் பொருட்டு நேற்று நேர்காணல் நடத்தப்பட்டது.
மாவட்ட அலுவகத்தில் நடந்த நேர்காணலுக்கு மாவட்ட செயலாளர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். மாநில வர்த்தக அணி செயலாளர் சந்திரன் முன்னிலை வகித்தனர்.தகுதி வாய்ந்த நபர்களை தேர்வு செய்யும் பணிகளில் மாவட்ட அவைத்தலைவர் கோவி முருகன், பொருளாளர் கருணாகரன், துணை செயலாளர்கள் விஜயகுமார், அண்ணாதுரை, குழந்தைவேலு, வசந்தா கண்ணுபிள்ளை ஆகியோர் மேற்கொண்டனர்.நிகழ்ச்சியில் செயற்குழு கோவிந்தன், ஒன்றிய செயலாளர்கள் நல்லதம்பி, ஜெய்சங்கர், இளையராஜா, ரவிச்சந்திரன், திருமால்,மனோகரன், ராமசந்திரன், நகர அவைத்தலைவர்கள் செல்வம், ஜானகிராமன் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.