திண்டிவனம்:திண்டிவனம் அருகே ஊரல் கிராமத்திலுள்ள முனீஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது.
திண்டிவனம் அடுத்த ஊரல் கிராமத்தில் குளக்கரையில் விபூதி முனீஸ்வரர், அம்மச்சார் அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் திருப்பணிகள் முடிந்து கும்பாபிஷேக விழாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.விழாவையொட்டி, கடந்த 29ம் தேதி திருவிளக்கு வழிபாடும், புனிதநீர் வழிபாடும், 30ம் தேதி முதற்கால வேள்வியும் நடந்தது.நேற்று காலை 8:30 மணிக்கு மேல் விபூதிமுனீஸ்வரர், அம்மச்சார் அம்மன், மூலவருக்கு வந்தவாசி ஆதிசக்தி சர்வமங்கள காளிசக்தி பீட லட்சுமண சுவாமி அடிகளார் தலைமையில் கும்பாபிஷேக விழா நடந்தது.விழாவில், ஐகோர்ட் நீதிபதி ஜோதிமணி, தேசிய இந்து திருக்கோவில் கூட்டமைப்பு செயலாளர் ஸ்ரீராம் உள்பட பலர் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் ஊர் பொது மக்கள் செய்திருந்தனர்.