தொடர் சாரலால் கருகும் பருத்திக்காய்கள் கவலையில் விவசாயிகள்

Added : டிச 02, 2019
Advertisement

உசிலம்பட்டி:உசிலம்பட்டியில் தொடர் சாரலால் நுாற்றுக்கணக்கான ஏக்கரில் மானாவாரியாக பயிரிட்ட பருத்தி செடிகளில் காய்கள் வெடிக்காமல் கருகி மக்குவதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.

இந்த ஒன்றியத்தில்அல்லிகுண்டம், மானுாத்து, பாறைப்பட்டி, சேடபட்டி ஒன்றியத்தில் சின்னக் கட்டளை, எழுமலையில் நுாற்றுக்கணக்கானஏக்கரில் மானாவாரியாக பருத்தி பயிரிடப்பட்டுள்ளன. இந்தாண்டுபருவமழை கிடைத்ததால் செடிகள் நன்குசெழித்து காய்கள்பிடித்துள்ளன.
பூச்சி தாக்குதல் தென் படாத நிலையில் சில நாட்களாக தொடர்ந்து மேக மூட்டமும், சாரல் மழையும் பெய்கிறது.நிலத்தின் மேற்பரப்பில்ஈரம் அதிகமாகியுள்ளதால் காய்கள் வெடிக்காமல் கருகுகின்றன.

பெருமாள் கோவில்பட்டி விவசாயி கருப்பையா: இரு ஏக்கரில்ரூ.40 ஆயிரம் செலவு செய்து பருத்தி நட்டுள் ளேன்.பத்து நாட்களாக வெயில் தாக்கமின்றி நிலம் ஈரமாக உள்ளது. முதலில் விளைந்த காய்கள் சதைப்பிடித்து கருத்து விடுகின்றன.தொடர்ந்து ஈரமாக இருப்பதால் பஞ்சு நமத்து மக்கி விடுகிறது. பின் செடிகளும் பட்டு விடுகின்றன. ஒரு நாள் விட்டு ஒருநாள் 100

கிலோ கிடைக்க வேண்டிய பருத்தி கிடைக்கவில்லை.மக்கிய பருத்தி கிலோ
ரூ.10க்கும் விலை போகிறது என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X