பொது செய்தி

தமிழ்நாடு

18 லட்சம் ரூபாய் பரிசுகள் பெற தயாரா? சுற்றுச்சூழல் பட தயாரிப்புகளை அனுப்புங்கள்

Added : டிச 02, 2019
Advertisement

ஊட்டி,:சுற்றுசூழலை பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தி எடுக்கும் விளம்பர படத்திற்கு, 18 லட்சம் ரூபாய் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.நீலகிரி கலெக்டர் இன்னசென்ட் திவ்யா அறிக்கை;சுற்றுச்சூழல் துறையானது மக்களிடம் சுற்றுசூழலை பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தி வருகிறது. மக்களிடம் எளிதாக சென்றடைய விளம்பர படங்களை தயாரித்து, ஒளிபரப்பி விழிப்புணர்வை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளது. தரமான விளம்பரங்களுக்கான போட்டியையும் அறிவித்துள்ளது.விளம்பர படமானது, தமிழ் மொழியில் இரண்டு நிமிடங்களுக்கு மிகாமலும், புதிதாக தயாரிக்கப்பட்டதாகவும் இருக்க வேண்டும். இதற்கு முன்பு, எந்தவொரு போட்டியில் பங்கேற்று பரிசு பெறாதிருக்க வேண்டும். படத்தில் வரும் கதாபாத்திரம் யாரையும் கேலி, விமர்சிப்பதாக இருக்க கூடாது. ஒருவர் எத்தனை படங்களை வேண்டுமானாலும், போட்டிக்கு அனுப்பலாம். பரிசு தொகையாக முதல் மூன்று இடங்களுக்கு, 7 லட்சம், 6 லட்சம், 5 லட்சம் ரூபாய் ரொக்க பரிசுகள், சான்றிதழ், விருதுகள் வழங்கப்படும்.விளம்பர பட தயாரிப்பு நிறுவனங்கள், திரைப்பட இயக்குனர்கள் மற்றும் அனுபவம் ஆர்வம் உள்ள நிறுவனங்கள் மற்றும் தனி நபர்கள் பங்கேற்று தங்கள் படைப்பினை 'இயக்குனர், சுற்றுச்சூழல் துறை, தரை தளம், பனகல் மாளிகை, சைதாப்பேட்டை, சென்னை-15,' என்ற முகவரிக்கோ, tndoe@tn.nic.in அல்லது www.environment.tn.nic.in என்ற இணையதள முகவரியிலோ டிச, 20ம் தேதி மாலை, 5:00 மணிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.இவ்வாறு, கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X