கண்மாய் தண்ணீரை காக்க மீன் குத்தகை கூடாது

Added : டிச 02, 2019
Advertisement

திருப்பரங்குன்றம்:திருப்பரங்குன்றம் தாலுகாவிலுள்ள கண்மாய்களில் தண்ணீரை பாதுகாக்க மீன் குத்தகை விடக்கூடாது என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

வைகை அணையில் திறக்கப்படும் தண்ணீர் மூலம் இத்தாலுகாவில் தென்கால், பானாங்குளம், சேமட்டான், குறுக்கட்டான், செவ்வந்திகுளம், மேலநெடுங்குளம், பெருங்குடி, விளாச்சேரி, நிலையூர் பெரிய கண்மாய்கள் நிரம்பும். இதன் மூலம் 10 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. அப்பகுதி நிலத்தடி நீர் ஆதாரமாகவும் இக்கண்மாய்கள் உள்ளன.

கடந்த காலங்களில் கண்மாய்களில் மீன் குத்தகை விடப்பட்டது. மீன் வளர்க்க ஏதுவாக
விவசாயத்திற்கு தேவைப்படும் நேரத்தில் தேவையான தண்ணீர் திறக்கப்படவில்லை. இதனால் விவசாயம் முடங்கியது. ஆனால் மீன்களை பிடிக்க ஏதுவாக தண்ணீர் வீணாக வெளியேற்றபட்டது. விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தையடுத்து கடந்தாண்டு மீன் குத்தகை தவிர்க்கப்பட்டது.

இந்தாண்டும் விவசாயத்திற்காக மீன் குத்தகை விடக் கூடாது என விவசாயிகள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X