பொது செய்தி

தமிழ்நாடு

ஆர்.டி.ஓ., இடமாற்றத்திற்கு எதிராக களமிறங்கும் பழங்குடியின மக்கள்

Added : டிச 02, 2019
Advertisement

பந்தலுார்:கூடலுார் ஆர்.டி.ஓ., ராஜ்குமாரின் பணியிட மாற்றத்திற்கு, பழங்குடியின மக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களும் எதிராக களமிறங்கியுள்ளனர்.கூடலுாரில் கடந்த ஓராண்டாக பணியாற்றிய, ஆர்.டி.ஓ., ராஜ்குமார் பழங்குடியின மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் வளர்ச்சி காண முயற்சி மேற்கொண்டார்.முதுமலை மாற்றிட திட்டத்தில் பல கோடி ரூபாய் ஊழலை வெளிக்கொண்டு வந்ததில் முழு முயற்சி; 3 பழங்குடியின மாணவியரை போட்டி தேர்வு எழுத வைத்து, வனக்காப்பாளர்களாக தேர்ச்சி பெற்றது; மக்கள் பிரச்னைகள் தெரிவித்தால், உடனுக்குடன் தீர்வுக்கு வழி வகுத்தது போன்றவை மக்களிடையே வரவேற்பை பெற்றது.இந்நிலையில், புதிதாக துவக்கப்பட்ட வருவாய் கோட்டமான வாணியம்பாடிக்கு இடமாறுதல் செய்யப்பட்டார். மாற்றம் செய்யப்பட்டால், வளர்ச்சி பணிகள் பாதிக்கப்படுவதுடன், பல்வேறு முறைகேடுகளை விசாரிப்பதில் தொய்வு ஏற்படும் என கூறி, இவரே தொடர்ந்து ஆர்.டி.ஓ.,வாக பணியாற்ற பழங்குடியினர் உட்பட அனைத்து தரப்பு மக்கள், சமூக நல ஆர்வலர்கள், ஆர்.டி.ஓ., அலுவலகத்தை கடந்த, 3 நாட்களாக முகாமிட்டனர்.இந்நிலையில், இவர்களுடன் துறை பணியாளர்களும் களத்தில் இறங்க முடிவு செய்து, இன்று (2ம் தேதி) கோரிக்கை முன்மொழிவு கூட்டம் நடத்தி அடுத்த கட்ட நடவடிக்கைக்கு, தயாராகி வருகின்றனர். அதேநேரத்தில், பல்வேறு கடத்தல் மற்றும் சமூக விரோத செயல்களில் ஈடுபடுவோர் மத்தியில், இவரது பணிமாற்றம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X