பொது செய்தி

தமிழ்நாடு

கனமழையால் புதிய அருவிகள் ரசித்து செல்லும் பயணிகள்

Added : டிச 02, 2019
Advertisement

கோத்தகிரி,:கோத்தகிரி பகுதியில் பெய்துவரும் கன மழை காரணமாக, சாலையோரங்களில் திடீர் அருவிகள் உருவாகி உள்ளதால், சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் பார்வையிட்டு செல்கின்றனர்.நீலகிரி மாவட்டத்தில், கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால், தேயிலை மற்றும் காய்கறி தோட்டங்களுக்கு அனுகூலமாக அமைந்துள்ளதால், மகசூல் அதிகரித்து வருகிறது. மேலும், நீராதாரங்கள் நிறைந்து வருவதால், தண்ணீர் தட்டுப்பாடு குறைய வாய்ப்புள்ளது. இந்நிலையில், கோத்தகிரி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில், இரவு மற்றும் பகல் நேரங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக, மலை முகடுகளில் இருந்து, தாழ்வான பகுதிக்கு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால், சாலை ஓரங்களில் புதிதாக அருவிகள் உருவாகியுள்ளது. இதனை, சுற்றுலா பயணிகள் உட்பட உள்ளூர் மக்கள், ஆர்வத்துடன் கண்டு களித்து செல்கின்றனர். மேலும், சாரல் மழையுடன், மேகமூட்டமான காலநிலையில், அருவி அருகே நின்று 'செல்பி' எடுத்தும் செல்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X