பொது செய்தி

தமிழ்நாடு

ஓவியப்போட்டியில் அரசு பள்ளி மாணவர் சாதனை: மாவட்ட கல்வி அதிகாரி பாராட்டு

Added : டிச 02, 2019
Advertisement
 ஓவியப்போட்டியில் அரசு பள்ளி  மாணவர் சாதனை: மாவட்ட கல்வி அதிகாரி பாராட்டு

உளுந்தூர்பேட்டை:மாநில அளவில் ஓவியப் போட்டியில் மூன்றாமிடம் பிடித்த அரசு பள்ளி மாணவரை, முதன்மை கல்வி அலுவலர்பாராட்டினார்.

மதுரை சமூக அறிவியல் கல்லூரியில், மாநில அளவிலான ஓவிய போட்டி நடந்தது.இப்போட்டியில் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுகா எலவனாசூர் கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவன் வெங்கடேஷ், மாநில அளவில் மூன்றாம் இடம் பிடித்து வெற்றி பெற்றார்.வெற்றி பெற்ற மாணவனை விழுப்பும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனுசாமி மற்றும் உளுந்தூர்பேட்டை மாவட்ட கல்வி அலுவலர் மணிமொழி, மாவட்ட அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்ட அலுவலர் அயூப்கான், ஆசிரியர்கள் பாராட்டி வாழ்த்தினர்.மேலும் மாணவனின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த ஓவிய ஆசிரியர் ரவிச்சந்திரன், சுப்பிரமணியன் ஆகியோரையும் பாராட்டினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X