பொது செய்தி

தமிழ்நாடு

பையூர் அருகே வறண்டு காணப்படும் கோரையாறு

Added : டிச 02, 2019
Share
Advertisement
உளுந்தூர்பேட்டை:தொடர் மழையிலும் வறண்டு காணப்படும் கோரை ஆற்றால் விவசாயிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.கள்ளகுறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் அணைக்கட்டில் உள்ள தென்பெண்ணை ஆற்றில் இருந்து கோரையாறு பிரிந்து செல்கிறது.இந்த கோரையாறு திருக்கோயில் அணைக்கட்டில் இருந்து பிரிந்து திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள பையூர் வழியாக ஏனாதிமங்கலம் வழியாக சென்று மீண்டும் தென்பெண்ணை
 பையூர்  அருகே  வறண்டு காணப்படும் கோரையாறு

உளுந்தூர்பேட்டை:தொடர் மழையிலும் வறண்டு காணப்படும் கோரை ஆற்றால் விவசாயிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.

கள்ளகுறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் அணைக்கட்டில் உள்ள தென்பெண்ணை ஆற்றில் இருந்து கோரையாறு பிரிந்து செல்கிறது.இந்த கோரையாறு திருக்கோயில் அணைக்கட்டில் இருந்து பிரிந்து திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள பையூர் வழியாக ஏனாதிமங்கலம் வழியாக சென்று மீண்டும் தென்பெண்ணை ஆற்றில் சேர்கிறது.கடந்த இரண்டு நாட்களாக தொடர் மழை பெய்து வந்த நிலையில், இந்த கோரை ஆற்றில் தண்ணீர் ஏதுமின்றி வறண்ட நிலையில் காணப்படுகிறது. இது விவசாயிகளிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.இருப்பினும் தொடர் மழையாலும், திருவண்ணாமலை சாத்தனூர் அணை திறந்தால் தண்ணீர் வரும் என நம்பிக்கையுடன் விவசாயிகள் காத்திருக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X