பொது செய்தி

தமிழ்நாடு

உயர்வு! தொடர் மழையால் கோமுகி அணையின் நீர் மட்டம்..பாசன வசதி பெறும் விவசாயிகள் மகிழ்ச்சி

Added : டிச 02, 2019
Advertisement
 உயர்வு! தொடர் மழையால் கோமுகி அணையின் நீர் மட்டம்..பாசன வசதி பெறும் விவசாயிகள் மகிழ்ச்சி

கச்சிராயபாளையம்:கல்வராயன் மலையில் பெய்யும் தொடர் மழை காரணமாக கோமுகி அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கல்வராயன் மலையின் அடிவார பகுதியில் அமைந்துள்ளது கோமுகி அணை. இந்த அணை கடந்த 1963 ஆண்டு அன்றைய முதல்வர் காமராஜர் தலைமையில் அடிக்கல் நாட்டப்பட்டு 1965 ம் ஆண்டு முதல்வர் பக்தவச்சலம் அவர்களால் அணை பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. கல்வராயன் மலையில் உற்பத்தியாகும் பொட்டியம், கல்படைமற்றும் மல்லிகை பாடி ஆகிய ஆறுகளின் மூலம் கோமுகி அணை நீர் பிடிப்பு பெறுகிறது.கல்வராயன் மலையில் பெய்யும் மழை நீர் முழுவதும் இந்த 3 ஆறுகளின் வழியாக கோமுகி அணையில் நிரம்புகிறது.360 ெஹக்டேர் நீர் பிடிப்பு கொண்ட இந்த அணையின் மொத்த கொள்ளளவு 46 அடி(560 மில்லியன் கன அடி) ஆகும்.இதன் மூலம் 50 க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள 2 ஆயிரத்து 024 ெஹக்டேர் விளை நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. அணையில் பழைய பாசன முறையான கோமுகி ஆற்றில் 4 ஷட்டர்கள் உள்ளன. மேலும் புதிய பாசன திட்டத்திற்கு 8 ஆயிரத்து 917 மீட்டர் அளவுள்ள 1 பிரதான கால்வாய் மற்றும் 4 கிளை கால்வாய்கள் உள்ளன.அணையிலிருந்து உற்பத்தியாகும் கோமுகி ஆற்றில் வடக்கனந்தல், சோமண்டார்குடி, ஏமப்பேர், கள்ளக்குறிச்சி, தென்கீரனுார், நீலமங்கலம், குரூர், பொரசக்குறிச்சி, விருகாவூர், நாகலுார், வேளாகுறிச்சி உள்ளிட்ட 11 அணை கட்டுகள் உள்ளன.

இந்த அணை கட்டுகள் மூலம் நுாற்றுக்கும் மேற்பட்ட ஏரிகள் நீராதாரம் பெறுகின்றன.மேலும் கோமுகி அணையின் பழைய பாசனத்தின் மூலம் 33 கிராமங்களில் உள்ள ஐந்தாயிரத்து 860 ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. புதிய பாசன கால்வாய்கள் மூலம் ஏழு கிராமங்களில் உள்ள ஐந்தாயிரம் ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.இந்த ஆண்டு பருவ மழை போதிய அளவு பெய்யாததால் அணை நிரம்ப காலதாமதம் ஏற்பட்டதை தொடர்ந்து கடந்த மாதம் சம்பா சாகுபடிக்காக அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டது.
தொடர்ந்து மழை இன்றி காணப்பட்டதால் அணை நீர் கல்வராயன் மலையில் உற்பத்தியாகும் நீர் வரத்து குறைந்து அணையின் நீர் மட்டம் குறைய தொடங்கியது. இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக கல்வராயன் மலை மற்றும் கச்சிராயபாளையம் சுற்றியுள்ள பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது.இதனால் பொட்டியம், கல்படை, மல்லிகைபாடி ஆகிய ஆறுகளில் நீர் வரத்து அதிகரித்து வினாடிக்கு ஆயிரம் கன அடி நீர் வர துவங்கியது. அணையின் நீர் மட்டம் 44 ஆடியாக (540 மில்லியன் கன அடி) உயர்ந்தது. இதனை தொடர்ந்து அணையின் பாதுகாப்பு கருதி அணைக்கு வரும் நீர் முழுவதும் கோமுகி ஆறு வழியாக வெளியேற்றப்பட்டு வருகிறது. பொதுப்பணித்துறை அதிகாரிகள் அணையில் தொடர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கோமுகி அணையின் நீர் மட்டம் மீண்டும் உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X