வீணாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்கள் ஏலம் விடப்படுமா?| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

வீணாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்கள் ஏலம் விடப்படுமா?

Added : டிச 02, 2019
Share
சங்கராபுரம்:சங்கராபுரம் ஸ்டேஷனில் நீண்ட நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இரு சக்கர வாகனங்களை ஏலம் விடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.சங்கராபுரம் போலீஸ் ஸ்டேஷன் வளாகத்தில் திருட்டு வழக்கு, சாராயம் கடத்திய வழக்கு, விபத்தில் சிக்கிய வாகனம் என 200க்கும் மேற்பட்ட இரு சக்கர வாகனங்கள் கடந்த பல மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.வாகனங்களுககு உரியவர்கள் யாரும்,

சங்கராபுரம்:சங்கராபுரம் ஸ்டேஷனில் நீண்ட நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இரு சக்கர வாகனங்களை ஏலம் விடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சங்கராபுரம் போலீஸ் ஸ்டேஷன் வளாகத்தில் திருட்டு வழக்கு, சாராயம் கடத்திய வழக்கு, விபத்தில் சிக்கிய வாகனம் என 200க்கும் மேற்பட்ட இரு சக்கர வாகனங்கள் கடந்த பல மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.வாகனங்களுககு உரியவர்கள் யாரும், உரிமை கோராததால் நல்ல நிலையில் உள்ள பல வாகனங்கள் மழையிலும், வெயிலிலும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால், துரு பிடித்து வீணாகி வருகின்றது.நல்ல நிலையில் உள்ள வாகனங்களை பொது ஏலத்தில் விட்டால் அரசுக்கும் வருவாய் கிடைக்கும். வாகனங்களை விரைவில் ஏலம் விடுவதற்கு, கள்ளக்குறிச்சி எஸ்.பி., நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X