பொது செய்தி

தமிழ்நாடு

திருக்கோவிலுாரிலுள்ள பொதுக்கூட்ட மேடையை சீரமைக்க நடவடிக்கை தேவை

Added : டிச 02, 2019
Advertisement
 திருக்கோவிலுாரிலுள்ள பொதுக்கூட்ட மேடையை சீரமைக்க நடவடிக்கை தேவை

திருக்கோவிலூர்:திருக்கோவிலூர், மார்க்கெட் வீதியில் உள்ள பழமையான இந்திராகாந்தி நினைவு பொதுக் கூட்ட மேடையை சீர் செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

திருக்கோவிலூர், மார்க்கெட் வீதியில் இந்திராகாந்தி நினைவு பொதுக் கூட்ட மேடை உள்ளது. இந்த மேடையில் காமராஜர், அண்ணாதுரை, கருணாநிதி, ஜெயலலிதா உள்ளிட்ட பல தலைவர்கள் பொதுக்கூட்டத்திற்கு பயன்படுத்தியுள்ளனர். இந்த மேடை சுதந்திரப் போராட்ட தியாகியின் நினைவாக கட்டப்பட்டது.கடந்த 17 ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்த மேடையில் தான் பொதுக் கூட்டங்கள் அனைத்தும் நடைபெற்றது. இங்கு மட்டுமே காவல்துறை அனுமதி வழங்கும். காலப்போக்கில் அரசியல் கட்சிகள் நடத்தும் பொதுக் கூட்டத்திற்கு கூட்டம் வராத காரணத்தால், பொதுமக்கள் கூடும் 5 முனை சந்திப்பு, பஸ் நிலையம் என கூட்ட மேடையை கட்சிகள் மாற்றிக் கொண்டது.பொது சாலையை மறித்து பொதுக் கூட்டம் நடத்தக் கூடாது என்ற நீதிமன்றத்தின் உத்தரவை மீறி திருக்கோவிலூரில் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் ரோட்டில் கூட்டம் நடத்த காவல்துறை அனுமதி வழங்குகிறது. இதன் காரணமாக பழமையான பொதுக் கூட்ட மேடை பயனற்றுப் போனது. இதனை சுற்றி காய்கறி மார்க்கெட் பகுதியில் இருப்பவர்கள், கழிவுப் பொருட்களை கொண்டு வந்து கொட்டுகின்றனர். இதற்காக மாடுகள், பன்றிகள் இங்கு குவிந்திருக்கும். சிறுநீர் கழிக்கும் இடமாகவும் மாற்றி பொதுக் கூட்ட மேடையே சீரழிந்து போயிருந்தது.இது பற்றிய செய்தி சமீபத்தில் தினமலரில் வெளியான உடன், பேரூராட்சி நிர்வாகத்தால் சீரமைக்கப்பட்டு பொதுக் கூட்ட மேடை புதுப்பிக் கப்பட்டது. எனினும் காவல்துறை கூட்ட மேடையை பயன்படுத்த வேண்டும் என அரசியல் கட்சிகளுக்கு வலியுறுத்த வில்லை.இதன் காரணமாக சீரமைத்தும் பயன்படுத்தாமல் போனது. மீண்டும் கழிவுகள் கொட்டும் இடமாக மாறிவிட்டது.பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் பொதுக் கூட்டம் நடத்த பொதுக்கூட்ட மேடையை பயன்பாட்டுக்கு கொண்டுவர காவல்துறையும் பேரூராட்சி நிர்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைத்து தரப்பு மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X