சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தீபாவளி சீட்டு பணம் ஏமாற்றிய வழக்கு: நான்கு பேர் மீது வழக்கு

Added : டிச 02, 2019
Advertisement

திருக்கோவிலூர்:திருக்கோவிலூரில் தீபாவளி சீட்டு பணம் கட்டியவர்களை ஏமாற்றியது தொடர்பாக 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
திருக்கோவிலூர் கடைவீதியில் நகை கடை நடத்தி வந்தவர் முத்து மகன் முரளிகிருஷ்ணன், 40; இவர் தீபாவளி பரிசு திட்டத்தின்கீழ் சீட்டு பிடித்து வந்தார். இவரிடம் திருக்கோவிலூர் கங்கை அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த, வெங்கடேசன் மனைவி ராஜேஸ்வரி, 36; ஏஜென்டாக இருந்து பல பேரிடம் பணம் வசூலித்து ஒவ்வொரு நபருக்கும் மாதம் ஆயிரத்து 300 ரூபாய் வீதம் மொத்தம் 20 லட்சம் ரூபாய் பணம் கட்டி வந்தார்.வசூல் செய்த பணத்தை, முரளிகிருஷ்ணனிடம் பணியாற்றிய விக்கி, ராஜ்குமார், கல்யாணசுந்தரம் ஆகியோர் பெற்று வந்தனர். தீபாவளி முடிந்தும் சீட்டு பணத்திற்கான நகை மற்றும் பரிசுப் பொருட்களை கொடுக்காமல் ஏமாற்றி வந்த நிலையில், தற்பொழுது தலைமறைவாகி விட்டார்.இதுகுறித்து ராஜேஸ்வரி கொடுத்த புகாரின் பேரில் திருக்கோவிலூர் போலீசார் முரளிகிருஷ்ணன் உள்ளிட் 4 பேர் மீது வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.இதேபோல், தீபாவளி சீட்டு பணம் கட்டி ஏமாற்றப்பட்ட பலர், போலீசில் புகார் கொடுப்பதற்காக திருக்கோவிலூர் காவல் நிலையத்தை நேற்று முன்தினம் முற்றுகையிட்டு புகார் அளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X