செஞ்சி:செஞ்சி பகுதியில் பெய்து வரும் தொடர் மழையால் நான்கு ஆண்டுகளுக்கு பிறகு ஏரிகள் நிரம்பி உபரி நீர் வெளியேறி வருவதால் சங்கராபரணி ஆற்றில் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இந்த ஆண்டு தென்மேற்கு பருவ மழையின் போதே செஞ்சி பகுதியில் உள்ள ஏரிகளுக்கு 30 சதவீதம் அளவிற்கு தண்ணீர் வந்தது. அடுத்து வட கிழக்கு பருவ மழை துவங்கியதில் இருந்து தொடர் மழை பொழிந்து வந்தது. இதனால ஏரிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து கடந்த மாதம் மத்தியில் செஞ்சி ஒன்றியத்தில் 50 சதவீதம ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியது. இதில் இருந்து உபரி நீர் வெளியேறி வராக நதியிலும், சங்கராபரணி ஆற்றிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.செஞ்சியில் இருந்து மேல்களவாய் செல்லும் தரைப்பாலத்தில் சில நாட்கள் போக்குவரத்து தடைபட்டது.இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக பொழிந்த மழையால் செஞ்சி பகுதியில் உள்ள பெரிய ஏரிகளான சென்னா லூர், அன்னமங்கலம், பொன்பத்தி, காரியமங்கலம், வல்லம் உள்ளிட் 100க்கும் மேற்பட்ட ஏரிகள் நிரம்பி உபரி நீர் வெளியேறி வருகிறது.இதனால் வராக நதியிலும் சங்கராபரணி ஆற்றிலும் இரண்டாவது முறையாக வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலச்சேரிவராக நதி தரைப் பாலம், செஞ்சி மேல் கள வாய் தரைப்பாலத்தில் வெள்ளம் ஏற்பட்டு போக்கு வரத்து தடைபட்டுள்ளது.இதனால் இந்த வழியாக சென்று வந்த 50க்கும் மேற்பட்ட கிராம 6க்கள் சுற்று வழியில் செஞ்சிக்கு வருகின்றனர்.பயிர் சேதம்மேல்மலையனூர் ஒன்றியம் தொரப்பாடி கிராமத்தில் 50 ஏக்கர் அளவிற்கு நெல் பயிர்கள் தண்ணீரில் மூழ்கின. இதனால் விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.முல்லை நகர்செஞ்சியில் திருவண்ணாமலை ரோட்டில் உள்ள பீ ஏரி நிறைந்து ஏரிக்கு மேல் பகுதியில் உள்ள முருகர் கோவில் மற்றும் முல்லை நகரில் மழை நீர் சூழ்ந்தது.
பீ ஏரியின் மேற்பகுதியில் கடந்த 40 ஆண்டுக்கு முன்பு வீடுகள் இல்லை. அப்போது ஏரி நிறைந்தால் விவசாய நிலங்களிலேயே தண்ணீர் சூழும். இதன் பிறகு ஏரிகரைகளிலும், ஏரியின் உள்ளேயும் ஆக்கிரமித்தவர்கள் ஏரியின் உபரி நீர் உயரத்தை பாதியாக குறைத்து தண்ணீரை வெளியேற்றினர். இதனால் ஏரி நிரம்பி தண்ணீர் வெளியேறினாலும் முல்லை நகர் பகுதியில் தண்ணீர் சூழவில்லை. கடந்த 2017ம் ஆண்டு ஆத்திரமிப்புகளை அகற்றிய பிறகு இதன் உபரிநீர் வெளியோறும் பகுதியை 40 ஆண்டு கருக்கு முன்பிருந்த நிலைக்கு உயர்த்தி கட்டினர். இதனால் முல்லை நகரில் தண்ணீர் சூழ்ந்துள்ளது.வீடுகள் சேதம்மழையின் காரணமாக வரிக்கல் கிராமத்தில் 4 கூரை வீடுகளும், மேல் அருங் குணம் கிராமத்தில 3 கூரை வீடு கரும், கவரை கிராமத்தில் 1 ஒரு ஓட்டு வீடும் இடிந்து சேதமாகி உள்ளன..