பொது செய்தி

தமிழ்நாடு

கூட்டுறவு வங்கியில் விழா

Added : டிச 02, 2019
Advertisement
 கூட்டுறவு வங்கியில் விழா

ரிஷிவந்தியம்:சித்தால் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கு ஈவு தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.ரிஷிவந்தியம் அடுத்த சித்தால் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் நடந்த நிகழ்ச்சிக்கு சங்க தலைவர் தேவச்சந்திரன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் சின்னராஜ் முன்னிலை வகித்தார். செயலாளர் முருகேசன் வரவேற்றார்.இந்த சங்கத்தில் 3200 உறுப்பினர்கள் உள்ளனர். கடந்த 2015 முதல் 2018 வரை மூன்று ஆண்டுகளில் உறுப்பினர்கள் வாங்கிய லோன் உட்பட பல்வேறு வகையான பங்கு தொகைகளின் மூலம் 9.40 லட்சம் ரூபாய் லாபம் கிடைத்தது.இந்த லாபத்தொகை3200 சங்க உறுப்பினர்களுக்கும் பிரித்து வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் கூட்டுறவு சங்க உறுப்பினர்கள், வங்கி ஊழியர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X