அவலுார்பேட்டை:வளத்தி அருகே மரம் வெட்டும் தகராறில, கத்தியால் வெட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
வளத்தி அடுத்த தாமனுார் கிராமத்தை சேர்ந்த எத்திராஜ் மகன் ஏழுமலை, 48; ்இவருக்கும் அதே ஊரை சேர்ந்த தாமோதரன் மகன் மணவாளன்,45; என்பவருக்கும், அடுத்தடுத்த நிலங்கள் உள்ளது.நிலம் அருகிலிருந்த மரங்களை கடந்த 29 ம்தேதி, மணவாளன் வெட்டியுள்ளார். இதில் இரண்டு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில, மணவாளன் கத்தியால், ஏழுமலையின் கையில் வெட்டியுள்ளார். இதில் படுகாயமடைந்த ஏழுமலை சிகிச்சைக்காக செஞ்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.இது குறித்த புகார்களின் பேரில் வளத்தி போலீசார் இரண்டு தரப்பினர் மீதும் வழக்கு பதிந்து, மணவாளனை கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.