சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஆட்டோவில் தவற விட்ட நகை முதியவரிடம் ஒப்படைப்பு

Added : டிச 02, 2019
Advertisement

செஞ்சி:ஆட்டோவில் தவற விட்ட நகை பையை முதியவரிடம் ஒப்படைத்த ஆட்டோ டிரைவரை போலீசார் பாராட்டினர்.

செஞ்சி சக்கராபுரம் பகுதியை சேர்ந்தவர் யாகூப் அலி, 35; இவர் செஞ்சியில் ஆட்டோ ஓட்டி வருகிறார். நேற்று முன்தினம் மாலை திண்டிவனத்தை சேர்ந்த முதியவர் அருள்ஜோதி, 62; என்பவர், ஆட்டோவில் செஞ்சியில் இருந்து திண்டிவனத்திற்கு சென்றுள்ளார்.திண்டிவனத்தில் விட்டு விட்டு யாகூப் அலி செஞ்சிக்கு வந்து பார்த்த போது, ஆட்டோவில் முதியவரின் பை இருந்தது. அதில், 2 பவுன் தாலி சரடு, பாஸ்போர்ட், ஏ.டி.எம்., கார்டு, வங்கி பாஸ் புத்தகம் ஆகியன இருந்தன.இதையடுத்து செஞ்சி போலீசார் மூலம் முதியவர் அருள்ஜோதிக்கு தகவல் தெரிவித்தனர். நேற்று செஞ்சி போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்த அருள் ஜோதியிடம், யாகூப் அலி நகை உள்ளிட்ட பொருட்கள் இருந்த பையை ஒப்படைத்தார்.யாகூப் அலியை செஞ்சி சப் இன்ஸ்பெக்டர் சங்கர் சுப்ரமணியன் மற்றும் போலீசார் பாராட்டினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X