சம்பவம் செய்தி

தமிழ்நாடு

விழுப்புரம் நகரில் தொடர் மழை குடியிருப்புகளில் தண்ணீர் புகுந்தது

Added : டிச 02, 2019
Advertisement
 விழுப்புரம் நகரில் தொடர் மழை குடியிருப்புகளில் தண்ணீர் புகுந்தது

விழுப்புரம்:விழுப்புரம் நகரில் பெய்த தொடர் மழை காரணமாக, தாமரைகுளம் குடியிருப்புகளில் மழைநீர் சூழ்ந்தது. மேலும். 10 வீடுகளில் மழைநீர் புகுந்தது.விழுப்புரம் நகர பகுதியில், கடந்த சில தினங்களாக தொடர் மழை பெய்து வருகிறது.

நேற்று முன்தினம் பெய்த கன மழை காரணமாக, கிழக்கு பாண்டி ரோடு, தாமரைகுளம் காலனி குடியிருப்புகளில் தண்ணீர் சூழ்ந்தது. மேலும், 10 வீடுகளில் மழைநீர் புகுந்தது. இதனை வீட்டில் இருந்து வெளியேற்றும் பணியில், குடும்பத்தினர் ஈடுபட்டனர். பலர், வீட்டில் தங்க முடியாமல், பக்கத்து வீடுகளில் குடும்பத்துடன் சென்று தங்க வேண்டிய நிலை ஏற்பட்டது.குளம் நிரம்பியது :விழுப்புரத்தில் பெய்த தொடர் மழையால் அப்பகுதியில் உள்ள தாமரைகுளம், மழை நீரால் நிரம்பி வழிகிறது. அந்த குளத்தில், கோலியனுாரான் வாய்க்காலில் இருந்து பிரியும் கழிவுநீர் கலக்கிறது. மேலும், தாமரைகுளம் பகுதியில் உள்ள பாதாள சாக்கடை கால்வாயில் இருந்த கழிவுநீர் வெளியேறி, மழை நீருடன் வீதிகளில் வெளியேறுகின்றது.பயணிகள் அவதி :விழுப்புரம் புதிய பஸ் நிலைய வளாகத்தில், வழக்கம் போல், மழை நீர் வெளியேற வழியின்றி, குளம்போல் தேங்கியது. இதனால், மழைநீர் வடியும் வரை, பஸ் பயணிகள் பெரும் அவதிப்பட்டனர்.மக்கள் முற்றுகை : விழுப்புரம் கே.கே.ரோடு முக்தி வளாகம் அடுத்த ராஜிவ்காந்தி நகர் பகுதியில், மழை காரணமாக சாலைகளில் சேறும் சகதியுமாக மாறியது. பல வீடுகளின் முன் மழை நீர் தேங்கியது. இதனை கண்டித்து அப்பகுதி மக்கள் மறியல் செய்ய திரண்டனர். தகவலறிந்த முன்னாள் கவுன்சிலரான நகர கூட்டுறவு வங்கி தலைவர் தங்கசேகர், விரைந்து சென்று, பொதுமக்களை சமாதானம் செய்தார். அவரது காரை முற்றுகையிட்ட மக்கள், சாலையை விரைந்து சீரமைக்க வேண்டும் என வலியுறுத்தினர்.வாய்காலில் கழிவுநீர் :விழுப்புரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் எதிர்புறம் உள்ள சுதாகர் நகர் பிரதான சாலையோர வாய்க்கால் ஆக்கிரமிப்புகள் கடந்தாண்டு அகற்றப்பட்டது. ஓராண்டு முடிந்த பின்னரும், அப்பகுதியில் சிமெண்ட் வாய்க்கால் அமைக்கப்படவில்லை. இதனால் அந்த வாய்காலில் கழிவுநீருடன் சேர்ந்து, மழைநீரும் தேங்கியுள்ளது. தொடர்ந்து மழை பெய்தால் கழிவுநீர் சாலையில் வழிந்தோடும் நிலையுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X