பொது செய்தி

தமிழ்நாடு

ஏரிகள் நிரம்பியதால் விவசாயிகள் மகிழ்ச்சி

Added : டிச 02, 2019
Advertisement

திருக்கோவிலுார்:திருக்கோவிலூர் பகுதியில் தொடர் மழை காரணமாக ஏரிகள் வேகமாக நிரம்பி வருகிறது.

வடகிழக்கு பருவமழை துவக்கத்திலிருந்தே திருக்கோவிலூர் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கடந்த ஐந்து ஆண்டுகளாக வறண்டு கிடந்த நீர்நிலைகளுக்கு நீர் வரத்து துவங்கியுள்ளது.தற்போது பெய்து வரும் மழையின் காரணமாக ஏரிகளுக்கான நீர்வரத்து அதிகரித்துள்ளது. இந்நிலையில் தொடர்ந்து மழை பெய்தால் எஞ்சியுள்ள ஏரிகள் வேகமாக நிரம்பும் சூழல் உருவாகியுள்ளது.நிலத்தடி நீரை பயன்படுத்தி பயிர் செய்யும் விவசாயிகள் சம்பா நெல் சாகுபடியை முன்கூட்டியே தொடங்கிவிட்ட நிலையில், கடந்த இரண்டு நாட்களாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக நாற்றங்கால் தயார் படுத்தி வைத்துள்ள விவசாயிகள் நடவு பணியை தீவிரப்படுத்தியுள்ளனர்.இந்நிலையில் மழை மேலும் தீவிரம் அடையும் பட்சத்தில் தென்பெண்ணை ஆற்றில் இருந்து ஏரிகளுக்கு தண்ணீர் செல்ல வாய்ப்பு ஏற்படும் இதன் மூலம் ஆற்று வாய்க்கால் மூலம் ஏரிகள் வேகமாக நிரம்பும் சூழல் உருவாகும் என்ற எதிர்பார்ப்பில் விவசாயிகள் உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X