பொது செய்தி

தமிழ்நாடு

குடிநீரில் கலக்குது கழிவுநீர்; தொற்றுநோய் பரவும் அபாயம்

Added : டிச 02, 2019
Advertisement
 குடிநீரில் கலக்குது கழிவுநீர்; தொற்றுநோய் பரவும் அபாயம்

காரியாபட்டி:ரேஷன் பொருட்கள் வாங்க பக்கத்து ஊருக்கு பயணம், குடிநீரில் கலக்கும் கழிவுநீர், எரியாத தெருவிளக்குகள், விஷப்பூச்சிகளின் நடமாட்டம், விரட்டும் கொசுக்கள், செயல்படாத குடிநீர் தொட்டிகள் என பல்வேறு பிரச்னைகளில் சிக்கி தவிக்கின்றனர் பல்லவரேந்தல் கிராம மக்கள்.

எரியாத தெருவிளக்குகளால் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் தவிக்கும் நிலை, விஷப்பூச்சிகள் நடமாட்டம் அதிகம், ஊருக்குள் வாறுகால் வசதி இல்லாததால் கழிவு நீர் தெருக்களில் தேங்கி கொசுக்களின் உற்பத்தியாகி, அதிகமாகி பகலிலே கடிக்கிறது. மழை நேரத்தில் தெருக்களில் சேரும் சகதியுமாக மாறி, ஆட்கள் நடமாட முடியாமல் சிரமப்படுகின்றனர். மக்கள் பயன்பாட்டிற்காக போடப்பட்ட இரண்டு குடிநீர் தொட்டிகள் பழுதடைந்து பல ஆண்டுகள் ஆகியும், பழுது நீக்கப்படாமல், அரசு நிதி வீணடிக்கப்பட்டு வருகிறது. 'பம்ப்' அறையில் உள்ள இரும்பு குழாய் உடைந்து குடிநீர் வீணாவதுடன், தண்ணீர் தேங்குவதால் டெங்கு கொசு உற்பத்தியாக வாய்ப்புள்ளது என புலம்புகின்றனர் இப்பகுதி மக்கள்.
உரிய பதில் இல்லை
குளியல் தொட்டி கட்டப்பட்டு, ஒரு வாரம் மட்டுமே பயன்பாட்டில் இருந்தது. அதற்கு பின் பல வருடங்களாகியும் இதுவரை பயன்பாட்டில் இல்லை. அரசு நிதி வீணடிக்கப்பட்டு வருகிறது. பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தில் வீடு கட்டித்தருவதாக கூறி, முழுத் தொகையும் எடுத்துக் கொண்டு, கட்டித் தராமல் பாதியிலே நிறுத்திவிட்டனர். பல வருடங்களாகியும் அதிகாரிகளிடம் கேட்டால் உரிய பதிலளிக்க மறுக்கின்றனர். ரேஷன் பொருட்கள் வாங்க 2 கி.மீ., துாரமுள்ள பாப்பணம் கிராமத்திற்கு சென்று வருகிறோம். பகுதி நேர ரேஷன் கடை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.-தங்கவேல், விவசாயி.
சிதறிக்கிடக்கும் ரோடு
4 வருடங்களாக தெரு விளக்குகள் எரியவில்லை. இரவு நேரங்களில் மிகவும் சிரமப்படுகிறோம். விஷப் பூச்சிகள் நடமாட்டத்தில் வெளியில் நடமாட பயமாக இருக்கிறது. பாப்பணம் ரோடு சேதமடைந்துள்ளதால், மழை நேரத்தில் வாகனங்கள் செல்ல முடியவில்லை. பல லட்சம் செலவு செய்து போடப்பட்ட அடி குழாய், தரைதள தொட்டி பயன்படுத்தாமல் வீணாகி வருகிறது. இதனை சீரமைக்க வேண்டும். சிமென்ட் ரோடு கற்களாக சிதறிக்கிடப்பதால் நடமாட முடியவில்லை. இதனை சீரமைக்க வேண்டும்.- மஞ்சுளா, குடும்பத்தலைவி.
குடிநீரில் புழுக்கள்
குடிநீர் சப்ளைக்காக கட்டப்பட்ட மேல்நிலை தொட்டியை சுற்றி சாக்கடை கழிவுநீர் தேங்கி நிற்கிறது. மேல்நிலைத் தொட்டி குழாய் உடைந்து இருப்பதால், குடிநீரில் புழுக்கள் கலந்து சப்ளையாகிறது. இதனை பயன்படுத்துவதால் தொற்று கிருமிகள் பரவும் அபாயம் இருக்கிறது. அதிகாரிகளிடத்தில் பலமுறை முறையிட்டும் எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை. தற்போது, காய்ச்சல் பரவி வருவதால், குடிநீரை பயன்படுத்த பயமாக இருக்கிறது. வாறுகால் வசதி கிடையாது. தெருக்கள் சேரும் சகதியுமாக இருப்பதால், குழந்தைகளுக்கு காலில் புண் ஏற்படுகிறது.-பிஸ்மில்லா, குடும்பத்தலைவி.
ஆழ்துளை கிணறால் ஆபத்து
குடிநீர் சப்ளைக்காக கண்மாய் கரையை ஒட்டி ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டது. சில வருடங்கள் இயங்கிய நிலையில் மின் மோட்டார் பழுதானது. பழுது நீக்கித் தருவதாகக் கூறி எடுத்துச் சென்றனர். இதுவரை மின் மோட்டார் பொருத்தவில்லை. ஆழ்துளை கிணறு திறந்த நிலையில் பாதுகாப்பு இல்லாமல் இருக்கிறது. அதில் கல்லை துாக்கி வைத்து ஆபத்தை தவிர்த்து வருகிறோம். குழந்தைகள் தவறி விழும் முன் அவற்றை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்.-ஆடியராஜன், தனியார் ஊழியர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X