சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வழித்தடம் மாறிய அரசு பஸ்கள்; 10 கிராம மக்கள் பாதிப்பு

Added : டிச 02, 2019
Advertisement

ஸ்ரீவில்லிபுத்துார்:ஸ்ரீவில்லிபுத்துார் அரசு பஸ் டெப்போவிலிருந்து இயக்கப்படும் டவுன் பஸ்கள், அவ்வப்போது டிரைவர் மற்றும் கண்டக்டர்களின் தன்னிச்சையான செயல்பாட்டால் வழித்தடம் மாறி இயங்குவதால், 10 கிராம மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.
ஸ்ரீவில்லிபுத்துாரில் இருந்து லட்சுமியாபுரம், நுார்சாகிபுரம், பொட்டல்பட்டி, காமராஜர் நகர், அழகுதெய்வேந்திரபுரம், பாலசுப்பிரமணியபுரம், கங்காகுளம், துலுக்கன்குளம், கன்னார்பட்டி, காலனி, பெருமாள்தேவன்பட்டி வழியாக 3 அரசு டவுன் பஸ்கள் இயங்கி வந்தன. ஆனால், இவ்வழித்தடத்தில் ரயில்வே சுரங்கப்பாதை பணிகள் துவங்கியபோது, மாற்று வழித்தடத்தில் இயங்கியது.இந்நிலையில் சுரங்கப்பாதை பணிகள் முடிந்து, மீண்டும் இவ்வழித்தடம் பயன்பாட்டிற்கு வந்தநிலையில், இந்த பஸ்கள் சரியான முறையில், சரியான நேரத்தில் வராமல், அவ்வப்போது டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்களின் இஷ்டத்திற்கு வழித்தடம் மாற்றி செல்வதால், இந்த 10 கிராம பொதுமக்கள், மாணவர்கள், நோயாளிகள், கர்ப்பிணி பெண்கள் பாதிக்கப்படுகின்றனர்.

இதுகுறித்து டெப்போ மேலாளரிடம் புகார் கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதுகுறித்து கன்னார்பட்டி காலனி பொன்னுசாமி கூறியதாவது: இப்பகுதி கிராமங்கள் வழியாக அரசு டவுன் பஸ்கள் சரியான நேரத்திற்கு வருவது கிடையாது. டிரைவர், கண்டக்டர்கள் தங்கள் இஷ்டப்படி பஸ்களை இயக்குகின்றனர். எனவே, மக்களை திரட்டி, அரசு பஸ் டெப்போ முன்பு காத்திருப்பு போராட்டம் நடத்துவோம், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X