பொது செய்தி

தமிழ்நாடு

மனசு வைங்க சார்!சிமென்ட் ரோடு, வாறுகால் வசதி இல்லை... சகதியாகும் ரோடால் தினமும் தொல்லை

Added : டிச 02, 2019
Advertisement
 மனசு வைங்க சார்!சிமென்ட் ரோடு, வாறுகால் வசதி இல்லை...  சகதியாகும் ரோடால் தினமும் தொல்லை

நரிக்குடி:பருவமழை பெய்து வருவதோடு, அவ்வப்போது புயல் உருவாகி சில இடங்களில் கனமழையும், சில இடங்களில் சாரல் மழையும் விடிய விடிய பெய்து வருவதால் பேவர் பிளாக் கற்கள், சிமென்ட் ரோடு இல்லாத வீதிகளில் சேரும் சகதியுமாக மாறி மக்கள் நடமாட முடியாமல் சிரமப்படுகின்றனர்.

மாவட்டத்தில், அவ்வப்போது பருவமழை பெய்து வருவதால், பெரும்பாலான நீர் நிலைகளில் ஓரளவிற்கு தண்ணீர் நிரம்பி உள்ளது. கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வந்த நேரத்தில், மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்நிலையில் கடந்த சில தினங்களாக வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்து ஆங்காங்கே கனமழையும், சில மாவட்டங்களில் விடிய விடிய சாரல் மழையும் பெய்து வருகிறது. விருதுநகர் மாவட்டத்தில் காரியாபட்டி, நரிக்குடி, திருச்சுழி, அருப்புக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு ஊர்களில், வீதிகள் சேரும் சகதியுமாக மாறி, மக்கள் நடந்து செல்ல முடியாமல் சிரமப்படுகின்றனர். வாறுகால் வசதியும் பெரும்பாலான இடங்களில் இல்லை. இதனால் மழைநீர் வடிய வழியின்றி, ரோட்டில் தேங்கி சகதிக்காடாக மாறுகிறது. இதனால் மக்கள் நடக்கும்போது வழுக்கி கீழே விழுகின்றனர். முதியவர்கள் எங்கும் செல்ல முடியவில்லை. அவசரத்திற்கு வீதிகளில் நடந்து செல்ல முடியாத நிலை உள்ளது. நகராட்சி, பேரூராட்சிகளில் உள்ள பெரும்பாலான வீதிகளில் சிமென்ட் ரோடு, பேவர் பிளாக் பதித்ததால் மழை நேரத்தில் டூவீலர், ஆட்கள் எளிதில் சென்று வர முடிகிறது.

விரிவாக்கப்பகுதி, குறுகலான வீதிகளில் சாரல் மழைக்கு சேரும் சகதியுமாக மாறியதால் டூவீலர், ஆட்கள் செல்ல முடியாத நிலையில் சிரமப்பட்டு வருவதால், சிமென்ட் ரோடு, பேவர் பிளாக் கற்கள் பதிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வழுக்கி விழுகின்றோம்
வீதிகளில் சேறும், சகதியுமாக இருப்பதால், பள்ளிக்கு பிள்ளைகளை அழைத்துச் செல்ல முடியவில்லை. டூவீலர், நடந்து சென்றவர்கள் பலர் வழுக்கி விழுந்து காயமடைகின்றனர். ரோடுகளில் படிக்கட்டுகளை கட்டி ஆக்கிரமித்துள்ளதால், ஆட்டோ கூட செல்ல முடியவில்லை. மழைக்காலங்களில் தொற்றுக்கிருமிகள் பரவி காய்ச்சல் வருகிறது. அதே போல் சேற்றில் நடப்பதால் காலில் சேற்றுப்புண் வருமோ என அச்சமாக இருக்கிறது.
-சுமதி, குடும்பத் தலைவி, காரியாபட்டி

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X