நலத்திட்ட உதவிகள் வழங்கல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

நலத்திட்ட உதவிகள் வழங்கல்

Added : டிச 02, 2019
 நலத்திட்ட உதவிகள் வழங்கல்

ஸ்ரீவில்லிபுத்துார்:ஸ்ரீவில்லிபுத்துார் குருஞானசம்பந்தர் இந்து மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் சமூக பாதுகாப்பு துறையின் சார்பில், நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. கலெக்டர் கண்ணன் தலைமை வகித்தார்.
எம்.எல்.ஏ.,க்கள் ஸ்ரீவில்லிபுத்துார் சந்திரபிரபா, சாத்துார் ராஜவர்மன் முன்னிலை வகித்தனர். 238 பயனாளிகளுக்கு ஓய்வூதிய நலத்திட்ட உதவிகளை வழங்கி அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பேசினார். விழாவில் கூட்டுறவு சங்க தலைவர்கள் முத்தையா, மயில்சாமி, டி.ஆர்.ஓ., உதயகுமார், சிவகாசி சப் கலெக்டர் தினேஷ்குமார், தாசில்தார் கிருஷ்ணவேணி மற்றும் அரசுத்துறை அதிகாரிகள், பொதுமக்கள் பங்கேற்றனர்.சிவகாசி: சிவகாசி தாலுகா அலுவலகத்தில் அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. கலெக்டர் கண்ணன் தலைமை வகித்தார். உதயகுமார் டி.ஆர்.ஓ., முன்னிலை வகித்தார். சிவகாசி சப் கலெக்டர் தினேஷ்குமார் வரவேற்றார். முதியோர் உதவித்தொகை,, விதவை உதவி தொகை, ஆதரவற்றோர் உதவி தொகை, இலவச வீட்டுமனை பட்டா உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை 801 பயனாளிகளுக்கு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வழங்கினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X