பொது செய்தி

தமிழ்நாடு

ராஜபாளையத்தில் நாய் கண்காட்சி

Added : டிச 02, 2019
Advertisement
 ராஜபாளையத்தில் நாய் கண்காட்சி

ராஜபாளையம்:கோவையைச் சேர்ந்த ''நேச்சர் டாக் பிரீட் ஸ்பெசாலிட்டி கிளப்'' சார்பில் நாட்டு இன நாய்கள் கண்காட்சி ராஜபாளையம் அன்னப்பராஜா மேல்நிலைப்பள்ளியில் நடந்தது.

இக்கண்காட்சியில், தமிழகம், கேரள மாநிலத்திலிருந்து கோம்பை, கன்னி, சிப்பிபாறை, ராஜபாளையம், கேரவன்ஹவுண்ட் உள்ளிட்ட 8 வகையான 178 நாட்டுஇன நாய்கள் பங்கேற்றன. நாயின்வயது, உடல் அமைப்பு, உயரம், எடை, ஓட்ட அமைப்பு, வேகம் உள்ளிட்டவைகளைடெல்லியில் இருந்து வந்திருந்த நடுவர் ஷரத் ஷர்மா பரிசோதனை செய்தார். பின்னர் ஒவ்வொரு இனத்திலும், ஆண், பெண் என 16 நாய்கள் தேர்ந்தெடுக்கப்பட்டது. இந்த 16 நாய்களில் சிறப்பாக செயல்பட்ட 8 நாய்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு 'சாம்பியன்' பட்டம் வழங்கப்பட்டது.வெற்றி பெற்ற நாயின் உரிமையாளருக்குபள்ளி செயலர் கிருஷ்ணமூர்த்தி ராஜா சிறப்பு சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கினார். நாய்களுக்கு இலவச ரேபிஸ் தடுப்பூசிகள் போடப்பட்டன. வெளிநாட்டு நாய்கள் வளர்க்கும் மக்களின் கவனத்தை திசை திருப்பி, நாட்டு இன நாய்களை வளர்க்கும் ஆர்வத்தை தூண்டும் வகையில், இக்கண்காட்சி நடத்தப்பட்டதாக அமைப்பின் தலைவர் டாக்டர் ரவி தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X