பொது செய்தி

தமிழ்நாடு

40 வருடங்களுக்கு பின் மாணவர்கள் சந்திப்பு

Added : டிச 02, 2019
Share
Advertisement
ராஜபாளையம்:ராஜபாளையத்தில் 40 ஆண்டுகளுக்கு பின் முன்னாள் மாணவர்கள் ஒருங்கிணைந்த சந்திப்பு நிகழ்ச்சிநடந்தது. ராஜபாளையம் பி.ஏ.சி.எம் மேல்நிலைப்பள்ளியில் 1978 --79 ம் ஆண்டு 10 ம் வகுப்பு படித்தமுன்னாள் மாணவர்கள் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தனர். இதில் ஆசிரியர்கள், டாக்டர்கள், தொழிலதிபர்கள், வெளி மாநிலம் மற்றும் வெளிநாடுகளில் பணியாற்றுபவர்கள் என40க்கும்
 40 வருடங்களுக்கு பின் மாணவர்கள் சந்திப்பு

ராஜபாளையம்:ராஜபாளையத்தில் 40 ஆண்டுகளுக்கு பின் முன்னாள் மாணவர்கள் ஒருங்கிணைந்த சந்திப்பு நிகழ்ச்சிநடந்தது.

ராஜபாளையம் பி.ஏ.சி.எம் மேல்நிலைப்பள்ளியில் 1978 --79 ம் ஆண்டு 10 ம் வகுப்பு படித்தமுன்னாள் மாணவர்கள் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தனர். இதில் ஆசிரியர்கள், டாக்டர்கள், தொழிலதிபர்கள், வெளி மாநிலம் மற்றும் வெளிநாடுகளில் பணியாற்றுபவர்கள் என40க்கும் மேற்பட்டவர்கள்குடும்பத்துடன் பங்கேற்றனர்.முன்னாள் மாணவர் சுப்புராம் ஒருங்கிணைத்தார். நிகழ்ச்சியில் தங்கள் பள்ளி ஆசிரியர்கள்பேச்சிமுத்து, குலாம் தஸ்தாகிர் ஆகியோருக்கு நினைவு பரிசு வழங்கிய முன்னாள் மாணவர்கள்,அவர்களிடம் ஆசி பெற்றதுடன் பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.
இந்த கூட்டமைப்பின் மூலம் ஒவ்வொரு ஆண்டும் சமூகத்திற்கும், பொது மக்களுக்கும் பயன்படும்வகையிலான நலத்திட்டங்கள் செய்ய வேண்டும் என முடிவு செய்யப்பட்டது.முதற் கட்டமாகராஜபாளையம் அரசு மகப்பேறு மருத்துவமனைக்கு தேவையான 'மல்டி பாரா மானிட்டர்' கருவியை தலைமை டாக்டர் பாபுஜியிடம் வழங்கினர். ஏற்பாடுகளை ஜெயசங்கர், ராமசாமிசெய்திருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X