பொது செய்தி

தமிழ்நாடு

ஆபத்தில் அரவணைக்கும்

Added : டிச 02, 2019
Advertisement
 ஆபத்தில் அரவணைக்கும்

இன்றைய காலக்கட்டத்தில் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள அளவிற்கு விபத்துகளும் அதிகளவில் நடைபெறுகிறது. உடனுக்குடன் சிகிச்சை அளிக்க முடியாத போது உயிரிழப்புகள் ஏற்படுகிறது. மாரடைப்பு, பிரசவத்தில் குழந்தை இறப்பு போன்றவையும் அதிகரித்துள்ளன.இதுபோன்ற இறப்புகளை குறைக்க தமிழக மருத்துவ துறை மூலம் 'Tamilnadu Accident and Emergency care Initiative (TAEI) அதாவது ''விபத்து முதலுதவி மற்றும் அவசர சிகிச்சை அளித்து காத்தல்'' திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதன் மூலம் நேர மேலாண்மையை கடைபிடித்து விபத்து இறப்புகளை தடுக்க முடிகிறது.கடந்த 2017ல் துவக்கப்பட்ட இத்திட்டம், சிவப்பு, மஞ்சள், பச்சை என மூன்று பிரிவுகளில் தொடர் சிகிச்சைகளாக வழங்கப்படுகிறது. சிவப்பு எனில் நிலையில் உள்ளவர்கள், மஞ்சள் என்றால் தொடர் சிகிச்சை பெறுபவர்கள், பச்சை என்றால் லேசான காயமடைந்தவர்கள் என பிரித்துள்ளனர்.தமிழகத்தில் 28 மருத்துவக்கல்லுாரிகள், 31 மாவட்ட தலைமை மருத்துவமனைகள், 19 தாலுகா மருத்துவமனைகள் என 78 இடங்களில் இந்த 'தாய்' திட்டம் செயல்படுகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் தலைமை மருத்துவமனை, பழநி, கொடைக்கானலில் உள்ளது.பக்கவாதம், மாரடைப்பு, வாகனவிபத்து, தீக்காயம், விஷம்குடித்தல், குழந்தைக்கு அவசரசிகிச்சை என ஆறு வகையாக பிரித்து நோயாளிகள் விபரத்தை உடனடியாக தெரிவிக்க மருத்துவமனைகளில் தனிஅலைபேசி எண் வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் முன்கூட்டியே சம்பந்தப்பட்ட டாக்டர், ஊழியர்கள், தேவையான மருந்துகளை தயார்நிலையில் வைக்கமுடிகிறது. நோயாளியை கொண்டுவந்தவுடன் ஒருமணித்துளிகூட தாமதமின்றி சிகிச்சை அளிக்கின்றனர். இதனால் விபத்து இறப்புகள் குறைந்துள்ளன. இதுபற்றிய விவரங்களை www.taeionline.com என்ற இணைய முகவரியிலும் அறியலாம். குறைகளையும் பதிவு செய்யலாம்.திண்டுக்கல் தலைமை அரசு மருத்துவமனையில் தினமும் 80 முதல் 150பேர் வரை அவசரச் சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்படுகிறது. அவர்களுக்கு மருத்துவமனை டீன் விஜயக்குமார், துணைஇயக்குனர்(பொ) பூங்கோதை, கண்காணிப்பாளர் சுரேஷ்பாபு மேற்பார்வையில் தனியார் மருத்துவமனைக்கு நிகராக 'தாய்' திட்டத்தில் உயர்தர சிகிச்சை அளிக்கப்படுகிறது என திட்ட பொறுப்பாளர் டாக்டர் லலித்குமார் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X