பொது செய்தி

தமிழ்நாடு

பெரிய நெல்லிக்காய் கிலோ ரூ.24

Added : டிச 02, 2019
Advertisement

திண்டுக்கல்:திண்டுக்கல்லில் வரத்து அதிகரிப்பால் பெரிய நெல்லிக்காய் கிலோ ரூ.24 க்கு விற்றது.திண்டுக்கல், நத்தம், சாணார்பட்டி, பழநி, நிலக்கோட்டையில் ஆயிரத்து 100 எக்டேரில் பெரிய நெல்லிக்காய் சாகுபடியாகிறது. இங்கிருந்து வெளி மாவட்டங்கள், மாநிலங்களுக்கும் விற்பனைக்கு அனுப்புகின்றனர். பெரிய நெல்லிக்காய் ஊறுகாய் தயாரிக்கவும், மருந்து தயாரிப்பில் மூலப்பொருளாகவும் பயன்படுகிறது.சீசன் காலத்தில் திண்டுக்கல் மார்க்கெட்டிற்கு தினமும் 2 டன் பெரிய நெல்லிக்காய் விற்பனைக்கு வரும். தற்போது சீசன் இல்லாத நிலையிலும், வெளிமாநிலங்களில் இருந்து விற்பனைக்கு வருகிறது. வரத்து அதிகரிப்பால் சென்ற மாதம் ஒரு கிலோ ரூ.40 க்கும், கடந்த வாரம் ரூ.30 க்கு விற்ற நெல்லிக்காய், மேலும் விலை குறைந்து நேற்று ரூ.24 க்கு விற்றது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X