அருப்புக்கோட்டை:பள்ளிக்கல்வி துறையின் சார்பில், மாவட்ட அளவிலான சீனியர் பிரிவிற்கான கால்பந்து போட்டி மாவட்ட விளையாட்டு அரங்கில் நடந்தது.
இதில், அருப்புக்கோட்டை எஸ்.பி.கே., ஆண்கள் மேல்நிலைப் பள்ளி கலந்து கொண்டனர். இறுதி போட்டியில் சாத்துார் எஸ்.எஸ்.எச்.என்., பள்ளி மாணவர்களை வென்று மாநில போட்டிக்கு தகுதி பெற்றனர்.வெற்றி பெற்ற மாணவர்களை, நாடார்கள் உறவின்முறை தலைவர் சுதாகர், பள்ளி செயலர் காசிமுருகன், பள்ளி தலைவர் ஜெயகணேசன் மற்றும் நிர்வாக குழுவினர், தலைமை ஆசிரியர் ஆனந்தராஜன், உடற்கல்வி இயக்குநர் சவுந்திரபாண்டியன், உடற்பயிற்சி ஆசிரியர்கள் கணேஷ்குமார், சுரேஷ், பிரபு, சரத்குமார், ஆனந்தராஜ் பாராட்டினர்.