திண்டுக்கல்:பழநியில் தொழிலாளர் துறை இணையதள சேவை குறித்து விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.உதவி ஆணையர் ராமராஜ் தலைமை வகித்து பேசுகையில்,'தொழிலாளர் துறை இணையதளம் மூலம் ஆய்வுகள், பதிவுச்சான்று, உரிமம் பெறுதல் மற்றும் புதுப்பித்தல் சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக labour.tn.gov.in ல் இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது, என்றார்.உதவி ஆய்வாளர்கள் செந்தில் ஆண்டன், சுப்பையன் ஆகியோர்,'இணையதளத்தில் உரிமம், பதிவுச்சான்று பெற விண்ணப்பிக்கும் முறை, தேவையான தகவல்களை பெறுவது', குறித்துசெயல் விளக்க அளித்தனர்.