பொது செய்தி

தமிழ்நாடு

சகதிக்காடான ரோடு: சங்கடத்தில் பள்ளி மாணவர்கள்

Added : டிச 02, 2019
Advertisement
 சகதிக்காடான ரோடு: சங்கடத்தில் பள்ளி மாணவர்கள்

அருப்புக்கோட்டை:அருப்புக்கோட்டையில் பெய்த தொடர் மழையால் ரோடுகள் சேதமடைந்துள்ளதால், பள்ளி செல்ல மாணவர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர்.
அருப்புக்கோட்டையில் நகராட்சிக்குட்பட்ட ரோடுகள் எஸ்.பி.கே., பள்ளி ரோடு, வெள்ளக்கோட்டை பகுதி ரோடு, நாடார் மயான ரோடுகளில் பள்ளிகள், கல்லுாரிக்கு செல்லும் மாணவ, மாணவியர்கள் ஏராளமானோர் உள்ளனர். இவர்கள் நடந்தும், சைக்கிளில் சென்று வருவர். கடந்த 2 நாட்களாக பெய்த தொடர் மழையால் ரோடுகள் குண்டும், குழியுமாக உள்ளன. ஏற்கெனவே இந்த ரோடுகள் அமைக்கப்பட்டு பல வருடங்கள் ஆகி விட்டன. தற்போது பெய்த மழையில் முற்றிலும் சேதமடைந்து விட்டது. எஸ்.பி.கே., பள்ளி ரோடு குண்டும், குழியுமாக கிடங்கு போல் உள்ளது.
தொடர் மழையால் சேதமடைந்து சேறும் சகதியுமாக மழைநீர் தேங்கியும் உள்ளது. இந்த ரோட்டில் மாணவர்கள் சிரமத்துடன் வந்து செல்கின்றனர். இதேபோன்று,வெள்ளக்கோட்டை சந்திப்பில் மழைநீர் தேங்கி நடக்க முடியாத அளவிற்கு உள்ளது. முக்கியமான ரோடுகளை சீரமைக்க நகராட்சி அக்கறை காட்டுவதில்லை. தேவையற்ற இடங்களில் பேவர் பிளாக் கற்கள் பதித்தல், ரோடு போடுதல் போன்ற பணிகளை செய்கின்றனர். அவசியமான பகுதிகளை கண்டுகொள்வதில்லை. போக்குவரத்து மிகுந்த முக்கியமான பகுதிகளில் ரோடுகள் அமைக்க நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X