எரியோடு:எரியோடு கரூர் ரோட்டில் ரூ.75 லட்சத்தில் மின் மயான கட்டுமான பணி நடந்தது. பணி முடிந்து பல மாதங்களாகியும் மயானம் இன்னும் பயன்பாட்டிற்கு வராமல் கிடப்பில் உள்ளது. இது குறித்து அதிகாரிகள் கூறுகையில்,' மின்மயானம் லாப நோக்கில் இயங்குவது இல்லை. மயானத்திற்கு இருப்பு நிதி ஆதாரம் அவசியம். இதற்காக ஒரு குழு உருவாக்கி நன்கொடைகள் மூலம் இருப்பு நிதி ஆதாரத்தை உருவாக்க வேண்டும். அதை அடிப்படையாக கொண்டு ஊழியர்களுக்கு சம்பளம், இதர செலவுகளை கவனிக்க வேண்டும். குழு அமைத்ததும் மயானம் பயன்பாட்டிற்கு வரும்', என்றனர்.