பொது செய்தி

தமிழ்நாடு

மனதை இதமாக்க மரம் வளர்ப்போம்

Added : டிச 02, 2019
Advertisement
 மனதை இதமாக்க மரம் வளர்ப்போம்

மரங்கள் இல்லாமல், மழை இல்லாமல் தண்ணீரை பாட்டிலில் அடைத்து விற்பது போல், வருங்காலங்களில் சுத்தமான காற்றினையும் விற்க வேண்டிய நிலை வரும்.
மழைப்பொழிவிற்கு மரம் எவ்வளவு முக்கியமோ, அதேபோல் சுத்தமான காற்று கிடைக்கவும் மரம் முக்கியமாகிறது. இதனை யாரும் உணர்வதில்லை.இன்றைய காலத்தில் கட்டடங்களின் கட்டுமானப் பணிக்கு மரங்களின் தேவை அத்தியாவசியம் என்பதால் பெரும்பாலான மரங்கள் வெட்டப்படுகின்றது. மரங்கள் வெட்டப்படும் இடத்தில் புதிய மரக்கன்றுகளை நட்டு இதனை சமன் செய்யலாம். ஆனால் யாரும் இதைச் செய்ய முன் வருவதில்லை. இதனால் சுத்தமான காற்று என்பது கேள்விக்குறியாகிறது. மனதில் எவ்வளவு அழுத்தம் இருந்தாலும் அமைதியான மரங்கள் அடர்ந்த இயற்கை சூழலில் இருந்தால் மனம் இதமாகும். தற்சமயம் பெரும்பாலான அரசு அலுவலகங்களில் மரங்களைப் பராமரித்து வருகின்றனர். அந்த வகையில் சிவகாசி அரசு மருத்துவமனையில் ஏற்கனவே உள்ள மரங்களை பராமரிப்பதோடு, புதிய மரக்கன்றுகளையும் வைத்து வளர்க்கிறார்கள். இங்கு வருகின்ற நோயாளிகள் எவ்வளவு நேரம் காத்திருந்தாலும் சலிப்படைவதில்லை. ஏனெனில் மருத்துவமனை வளாகம் முழுவதும் மரங்களாக இருப்பதால் குளுகுளுவென இருக்கிறது. வெளிநோயாளிகள், உள் நோயாளிகளாக தங்கி சிகிச்சை பெறுபவர்கள், மருத்துவமனையில் இருக்கிறோம் என்ற உணர்வே ஏற்படாத அளவிற்கு மரங்கள் உள்ளது. உள் நோயாளிகள் சிறிது நேரம் நடைபயிற்சி மேற்கொள்ள இந்த சூழல் உதவுகிறது.
விரைவில் குணமாகுறாங்க
இயற்கை வளங்களை பேணிக்காப்பதால் மாசற்ற நகரை உருவாக்கலாம். மழைப்பொழிவிற்கு மரம் வேண்டும் என்பது போல் சுற்றுச்சூழலை பாதுகாக்க , சுத்தமான காற்று கிடைக்க மரங்கள் அவசியம். மருத்துவமனை வாளகத்தில் ஏற்கனவே உள்ள மரங்கள் தவிர, புதிதாகவும் மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரிக்கப்படுகிறது. மருத்துவமனைக்கு வருகின்ற நோயாளிகள் , இயற்கை சூழலோடு கலந்து ரசிக்கின்றனர். மேலும் நோயாளிகள் , மருத்துவனையில் இருக்கின்றோம் என்ற உணர்வு இல்லாமல் உள்ளனர். நோயாளிகளுக்கு தங்களுடைய சுற்றுச்சூழல் ரம்மியமாக இருந்தால், அவர்கள் அதிலேயே பாதி குணமடைந்து விடுவர்.-அய்யனார், தலைமை டாக்டர் (பொறுப்பு), சிவகாசி அரசு மருத்துவமனை.
சுத்தமான காற்றுக்கு வழி
இன்றைய நவீன காலத்தில் நகர் பகுதிகளில் சுத்தமான காற்று என்பது மிகவும் அரிதான ஒன்று. அதிகளவில் மரங்கள் இருந்தால்தான் சுத்தமான காற்று கிடைக்கும். மழைப்பொழிவிற்கு மரங்கள் எவ்வளவு முக்கியமோ, அதேபோல் சுத்தமான காற்றுக்கும் மரங்கள் அவசியம். புதிதாக மரக்கன்றுகள் நடவில்லை என்றாலும், இருக்கின்ற மரங்களையாவது பாதுகாக்க வேண்டும். இயற்கையை அழிக்க அழிக்க அதிக பாதிப்புகள் தான் ஏற்படும். எனவே மாசற்ற நகரை உருவாக்க அதிகளவில் மரங்கள் வளர்க்க வேண்டும்.-கணேசன், இயற்கை ஆர்வலர், சிவகாசி

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X