பொது செய்தி

தமிழ்நாடு

'எமிஸ்'சில் ஆசிரியர்கள்வங்கி விவரம் பதிவு

Added : டிச 02, 2019
Advertisement

திண்டுக்கல்:திண்டுக்கல் ஆசிரியர்களின் பான் கார்டு, வங்கி விவரங்களை 'எமிஸ்'சில் பதிவு செய்ய தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் பற்றிய தகவல்களை அறிய இ.எம்.ஐ.எஸ்., (எஜூகேஷனல் மேனேஜ்மெண்ட் இன்பர்மேஷன் சிஷ்டம்) திட்டம் கொண்டு வரப்பட்டது. இதில் ஆசிரியர்கள், மாணவர்கள் புகைப்படத்துடன் பள்ளியில் சேர்ந்த நாள், முகவரி உள்ளிட்ட விவரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் மாணவர்களுக்கு 'ஸ்மார்ட்' அடையாள அட்டை வழங்கப்பட்டு வருகிறது.விரைவில் ஆசிரியர்களுக்கும் 'ஸ்மார்ட்' அட்டை வழங்கப்பட உள்ளது. இதற்கு அடுத்ததாக, 'எமிஸ்'சில் ஆசிரியர்கள், மாணவர்களின் வருகை விவரங்களை தினமும் பதிவு செய்ய பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டு இருந்தது. இதை தொடர்ந்து ஆசிரியர்களின் வங்கி கணக்கு, பான் கார்டு விவரங்களையும் 'எமிஸ்'சில் பதிவு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. இதை பள்ளி தலைமையாசிரியர்கள் கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X