பொது செய்தி

தமிழ்நாடு

வேளாண் விற்பனை துறையில் திட்டம்

Added : டிச 02, 2019
Advertisement

திண்டுக்கல்:திண்டுக்கல், பழநியில் கூடுதலாக 'நீரா பானம்' விற்பனை மையம் அமைக்க வேளாண் விற்பனை துறையில் திட்டமிட்டுள்ளனர்.திண்டுக்கல் மாவட்டத்தில் தென்னை 30 ஆயிரத்து 417 எக்டேரில் சாகுபடியாகிறது. கேரளாவை தொடர்ந்து, தமிழகத்திலும் தென்னையில் இருந்து நீரா பானம் எடுக்க விவசாயிகள் பலரும் ஆர்வம் காட்டினர். இதையடுத்து, தமிழகத்தில் தேர்வு செய்யப்பட்ட தென்னை மரங்களில் இருந்து மட்டுமே நீரா பானம் எடுக்க அரசு அனுமதித்துள்ளது.நிலக்கோட்டை, ஆத்துாரில் தகுதியான ஆயிரம் தென்னை மரங்களில் இருந்து நீரா பானம் எடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஒரு மரத்தில் இருந்து தினமும் 1.5 லிட்டர் நீரா எடுத்து வருகின்றனர். விவசாயிகள் தாங்கள் சேகரிக்கும் நீரா பானத்தை திண்டுக்கல் தென்னை உற்பத்தியாளர் நிறுவனத்திடம் கொடுக்கின்றனர். அவர்கள் நீராவை சுத்திகரிப்பு செய்து, குளிர வைத்து மக்கள் அருந்துவதற்கு தயார் செய்கின்றனர்.அதனை மக்களிடம் கொண்டு சேர்க்க திண்டுக்கல்லில் 10, பழநியில் 4 இடங்களில் நீரா பானம் விற்பனை மையம் அமைக்கப்பட்டுள்ளது. பொது மக்களிடம் வரவேற்பு இருப்பதால் விற்பனை மையங்களை மேலும் அதிகரிக்க வேளாண் விற்பனை துறை திட்டமிட்டுள்ளது. இதற்காக இடத்தேர்வு நடக்கிறது. நீராவில் சோடியம், பொட்டாசியம், தாமிரம், இரும்பு, பாஸ்பரஸ், சர்க்கரை, புரதம் உள்ளிட்ட சத்துக்கள் உள்ளன என, அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X