திண்டுக்கல்:விருத்தாச்சலத்தைச் சேர்ந்த நகைக்கடை ஊழியர் சரவணன். இவர் வெள்ளிப் பொருட்களுடன் சென்னையில் இருந்து சென்னை - கொல்லம் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்தார். விருத்தாச்சலம் வந்ததும் பையை மறந்துவிட்டு கீழே இறங்கினார். இது குறித்து விருத்தாச்சலம் ரயில்வே போலீசாரிடம் தகவல் தெரிவித்தார். அவர்கள், திண்டுக்கல் ரயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். நேற்று காலை ரயில் திண்டுக்கல் வந்தததும் பையை போலீசார் மீட்டு, சரவணனிடம் ஒப்படைத்தனர்.
Advertisement